திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் - ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உறுதி - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Sunday, 15 March 2020

திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் - ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உறுதி

டோக்கியோ,
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோடிஜெனீரோவில் இந்த போட்டி நடைபெற்றது.  32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 9-ந் தேதி வரை நடக்கிறது. 

இந்தநிலையில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ்  உலகம் முழுவதும்  கோர தாண்டவம் ஆடிவருகிறது.  ஜப்பான் உள்பட 128 நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.
கொரோனா வைரஸ் பீதியால் இந்த போட்டி நடக்குமா? நடக்காதா? என்று ஒரு பக்கம் விவாதமே நடந்து கொண்டிருக்கிறது. ஒலிம்பிக் போட்டியை ஓராண்டு தள்ளிவைக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் யோசனை தெரிவித்துள்ளார். 
இந்நிலையில்  டோக்கியோவில் திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உறுதியளித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதால் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுமா? என கேள்வி எழுந்த நிலையில் திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என்றும்  எந்த தாமதமும் அல்லது ஒத்திவைப்பும் இருக்காது என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உறுதிப்பட தெரிவித்துள்ளது ஒலிம்பிக் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a comment