சுய கட்டுப்பாட்டுடன் இல்லையென்றால் அழிவை சந்திக்க நேரிடும் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Tuesday, 24 March 2020

சுய கட்டுப்பாட்டுடன் இல்லையென்றால் அழிவை சந்திக்க நேரிடும்

பிரதமர் மோடி

புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
மீண்டும் ஒருமுறை கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பேச வந்திருக்கிறேன். கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதில் ஒவ்வொரு இந்தியருக்கும் பொறுப்பு உள்ளது.
குழந்தைகள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் இணைந்து கொரோனாவை
எதிர்கொள்ள வேண்டும். ஊரடங்கு உத்தரவை வெற்றிகரமாக நடத்தி காட்டிய மக்களுக்கு நன்றி. வைரஸ் பரவுவதை எதிர்த்து இந்தியா வலிமையாக போராடும் என உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளோம்.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு என்பது உங்களை, உங்கள் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக.எடுக்கப்படுகிறது. ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம். எனவே ஊரடங்கு உத்தரவிற்கு ஒத்துழைக்க வேண்டும். பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை. எனக்கு மக்களின் பாதுகாப்பே முக்கியம்.
உறவினர்கள் உள்பட வெளிநபர்கள் யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள். மக்கள் சுய கட்டுப்பாடுடன் இல்லையென்றால்
நாம் அழிவை சந்திக்க நேரிடும். கொரோனாவை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். காட்டுத்தீ போல கொரோனா வேகமாக பரவி வருகிறது. 
அடுத்த 11 நாட்களில் மேலும் ஒரு லட்சம் பேரை தாக்கும். இதன்மூலம் கொரோனா எவ்வளவு வேகமாக பரவும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். கொரோனா பரவத் தொடங்கினால், அதை தடுத்து நிறுத்துவது பெரிய சவால்.
சேவைத் துறையில் பணியாற்றுவோரை கையெடுத்து வணங்குங்கள். ஊரடங்கு நீடிக்கும் வரை
அரசோடு இணைந்திருங்கள். கைகூப்பி கேட்டுக் கொள்கிறேன்.
இந்த தேசிய பேரிடரை குறைக்கும் வல்லமை இந்தியாவுக்கு உண்டு. அமைதியும் பொறுமையும் காக்க வேண்டிய தருணம் இது. ஊரடங்கு நீடிக்கும் வரை அரசோடு இணைந்திருங்கள். கைகூப்பி கேட்டுக் கொள்கிறேன்.
ஏராளமானோர் உதவுவதற்கு முன்வந்து கொண்டு இருக்கிறார்கள். உலக சுகாதார மையத்தின் ஆலோசனைப்படி, மருத்துவ உதவிகள் செய்யப்படுகின்றன. கொரோனாவை எதிர்கொள்ள ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.