சித்த மருத்துவம் சொல்வதென்ன? - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Saturday, 21 March 2020

சித்த மருத்துவம் சொல்வதென்ன?


தேனி மாவட்டம், உத்தமபாளையம் அரசு மருத்துவமனை உதவி சித்த வைத்திய மருத்துவ அலுவலர் சுவாமிநாதன் கூறும்போது: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடி மருந்துகள் இல்லை என்றாலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் சில உணவு வகைகள் மற்றும் சித்த மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளலாம்.
* அதிமதுர சூரணம், ஆடாதோடை குடிநீர் எடுத்து கொள்ளலாம். கபசுர குடிநீர் தினமும் காலையில் குடித்து வரலாம்.
* வைட்டமின் ‘சி’ நிறைந்த நெல்லிக்காய் லேகியம் எடுத்து கொள்ளலாம். அல்லது நெல்லிக்காய் ஜூஸ் செய்து குடிக்கலாம். மருந்துகள் எதுவாயினும் மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்து கொள்வது நல்லது.
* மாஸ்க், சானிட்டைசர் தட்டுபாடு குறித்து அதிக கவலை வேண்டாம். அவற்றை நாமே எளிதில் செய்து கொள்ள முடியும். வெள்ளைத்துணியை மஞ்சள், வேப்பிலை சாற்றில் நனைத்து காய வைத்து அதை முகமறைப்பாக (மாஸ்க்) அணிந்து கொள்ளலாம்.
* ஒரு லிட்டர் கொதிக்க வைத்த நீரில் கொஞ்சம் கல் உப்பினை சேர்த்து 10 கிராம் படிகாரம், 20 கிராம் மஞ்சள் தூள் கலந்து கை கழுவ மற்றும் தரையை துடைக்க பயன்படுத்தி கொள்ளலாம்.
* காய்ந்த நொச்சி இலை,  வேப்பிலை, குங்கிலியம் ஆகியவற்றை பொடித்து சாம்பிராணி போடுவது போல  நெருப்பில் இட்டு எழும் புகையை வீடு முழுக்கவோ இல்லை பணிபுரியும் இடத்திலோ  காட்டலாம்.
* நொச்சி இலை, மஞ்சள், உப்பு சேர்த்து நீரிலிட்டு கொதிக்க வைத்து எழும் ஆவியினை சுவாசிப்பது சிறந்த தடுப்பு முறையாகும்.
* தொண்டை புண் ஏற்படாமல் இருக்க மஞ்சள், உப்பு சேர்த்து கொதிக்க வைத்த நீரினை கொண்டு வாய் கொப்பளிக்கலாம்.

No comments:

Post a comment