கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது. - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Sunday, 22 March 2020

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது.


நியூயார்க்:
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில் உலகம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 7 ஆயிரத்து 725 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 13 ஆயிரத்து 54 பேர் உயிரிழந்துள்ளனர். 
மேலும், ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 874 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 95 ஆயிரத்து 797 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் அதிக அளவில் உயிரிழப்பை சந்தித்த நாடுகள் வருமாறு:-
சீனா                         – 3,261
இத்தாலி                  – 4,825
ஸ்பெயின்              – 1,378
ஜெர்மனி                – 84
அமெரிக்கா          – 344
ஈரான்                      – 1,556
பிரான்ஸ்                – 562
தென்கொரியா   – 104
சுவிஸ்சர்லாந்து  – 80
இங்கிலாந்து         – 233
நெதர்லாந்து         – 136
பெல்ஜியம்             – 67
ஜப்ப்பான்               – 36
பிரேசில்                  – 18
கிரீஸ்                        – 13
இந்தோனேசியா – 38
பிலிப்பைன்ஸ்     – 19
ஈராக்                        -17
சான் மரினோ      – 20
அல்ஜிரியா            – 15No comments:

Post a comment