3 மணி நேரத்தில் வைரசை கண்டறியும் கருவி : சாதனை படைத்த மினல் போஸ்லே - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Tuesday, 31 March 2020

3 மணி நேரத்தில் வைரசை கண்டறியும் கருவி : சாதனை படைத்த மினல் போஸ்லே

கொரோனா வைரசை கண்டுபிடிக்கும் கருவிகள் ஜெர்மனியில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. அந்தக் கருவியைக் கண்டுபிடிக்கும் பணியை, மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள ’மைலேப் டிஸ்கவரி சொல்யூசன்ஸ்’ என்ற ஆராய்ச்சி நிறுவனம் செய்துவந்தது. இந்நிறுவனத்தின் ஆய்வுப்பிரிவு தலைவர் மினல் போஸ்லே. இவர் எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தார். ஆனாலும், வைரசை கண்டறியும் கருவியை தயாரிப்பதற்கான ஆய்வில் இவர் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.கடந்த பிப்ரவரி மாதத்திலேயே இவரிடம் அப்பணி ஒப்படைக்கப்பட்டது. இவரது தலைமையிலான குழு இரவு, பகலாக இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தது.
வெறும் 6 வார காலத்திலேயே இவரது குழு கொரோனா வைரசை கண்டறியும் கருவியை கண்டுபிடித்துள்ளது. இந்த கருவி கடந்த 18ம் தேதி மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. முதல் நாள் வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்ற மினல் போஸ்லேக்கு 19ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் புனேயில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.பிரசவ காலத்திலும், வைரஸ் ஆய்வில் ஈடுபட்டு சாதனை படைத்த மினல் போஸ்லேக்கு பாராட்டுகள் குவி்ந்து வருகிறது.