மார்ச் 31 ஆம் தேதி வரை அரசு, தனியார் நூலகங்கள் மூடல் ! - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Friday, 20 March 2020

மார்ச் 31 ஆம் தேதி வரை அரசு, தனியார் நூலகங்கள் மூடல் !


உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இந்தியாவும் மெல்ல பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. நேற்று வரை 166 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 223
ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 49 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தில்,கொரோனாவால் இன்று மட்டும் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்தம் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிறது.
இதனிடையே, இத்தாலியை சேர்ந்த 69 வயது முதியவர் ஒருவர் ராஜஸ்தானில் கொரோனா பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார். இதனால் இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இந்த கொரோனா வைரஸில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள வேண்டுமெனில் அனைவரும் வரும் 22 ஆம்தேதி வீட்டிலேயே இருக்கும் படி,சுய ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி நேற்று அறிவுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மக்கள் கூடும் வணிக நிறுவனங்கள், கடைகள், கூட்டங்கள்,கோயில்கள், மத கூடங்கள், பள்ளிகள் ஆகியவை மார்ச் 31 ஆம் தேதிவரை மூடப்பட்டுள்ளன.
இதனைடுத்து, இன்று தமிழக அரசு மார்ச் 31 ஆம் தேதிவரை தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் நூலகங்கள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a comment