1 முதல் 9ம் வகுப்புகள் வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவிப்பு* - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

1 முதல் 9ம் வகுப்புகள் வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவிப்பு*

சென்னை: தமிழகத்தில் உள்ள 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார். மேலும், நேற்றைய (மார்ச் 25) பிளஸ் 2 தேர்வினை எழுத முடியாதவர்களுக்கு வேறொரு நாளில் தேர்வு
நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக 26ம் தேதி நடக்க இருந்த பிளஸ் 1 தேர்வும், நடக்கவிருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. 1 முதல் ஒன்பதாம் வகுப்புகளுக்கும் தேர்வு ஒத்திவைக்கப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற குழப்பம் நீடித்து வந்தது.
இந்நிலையில் முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கை: நேற்று (மார்ச் 24) நடைபெற்ற பிளஸ் 2 தேர்வினை எழுத முடியாதவர்கள்
மட்டும் வேறொரு நாளில் தனியாக தேர்வு நடத்தப்படும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களால் இறுதித்தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த வகுப்புகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் மறு அறிவிப்பு வரும்வரை டீக்கடை இயங்குவதற்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.