சனி பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நன்மை 2020 - ஆசிரியர் மலர்

Latest

 




 


சனி பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நன்மை 2020


 சனி பகவான்2020-ஆம் ஆண்டுக்கான சனிப் பெயர்ச்சி (வாக்கிய பஞ்சாங்கப்படி) எப்போது நிகழ உள்ளது? சனி பகவான் எந்த ராசியிலிருந்து எந்த ராசிக்கு மாற்றம் அடைகிறார்? மாற்றம் அடைவதினால் எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை, தீமைகள் ஏற்படும் என்பதைத் தெரிந்துகொள்வோம்.

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்தி் ஸ்ரீசார்வரி வருஷம், மார்கழி மாதம் 11ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 27.12.2020 தேதி அதிகாலை 5.22க்கு தனுசு லக்னத்தில் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு ஆட்சியாக மாறுகிறார். 

எத்தனை வருடம் மகர ராசியில் சனி பகவான் சஞ்சாரம் செய்கிறார்..

மகர ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 2 1/2 வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். 

மகர ராசியிலிருந்து தனது மூன்றாம் பார்வையால் மீன ராசியையும் – ஏழாம் பார்வையால் கடக ராசியையும் – பத்தாம் பார்வையால் துலா ராசியையும் பார்க்கிறார்
. சனி பகவானுக்குப் பார்வை பலத்தை விட ஸ்தான பலமே அதிகம். அதாவது பார்க்கும் இடத்தின் பலத்தினை விட இருக்கும் இடத்தின் பலமே அதிகம். 
 
பொதுவாக ராசிகள் பெறும் பலன்களின் அளவுகள்:

நன்மை பெறும் ராசிகள்:  ரிஷபம் – சிம்மம் – கன்னி – விருச்சிகம்

நன்மை தீமை இரண்டும் கலந்து பலன்கள் பெறும் ராசிகள்: மேஷம் – மீனம்

பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள்: மிதுனம் – கடகம் – துலாம் – தனுசு – மகரம் – கும்பம்

ஒவ்வொரு ராசியிலும் சனியின் நிலை:

நக்ஷத்ரம்

சனியின் நிலை

மேஷம்

நீசம்

ரிஷபம்

நட்பு

மிதுனம்

நட்பு

கடகம்

பகை

சிம்மம்

பகை

கன்னி

நட்பு

துலாம்

உச்சம்

விருச்சிகம்

பகை

தனுசு

நட்பு

மகரம்

ஆட்சி

கும்பம்

ஆட்சி

 மீனம்

நட்பு

ஒவ்வொரு கிரகத்துடனும் சனியின் நிலை:

கிரகம்

சனியின் நிலை

சூரியன்

பகை

சந்திரன்

பகை

செவ்வாய்

பகை

புதன்

நட்பு

குரு

சமம்

சுக்கிரன்

நட்பு

சனி காயத்ரீ மந்திரம்

ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்!

ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்!

ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தன்னோ சனைச்சர ப்ரசோதயாத்!

ஓம் சனீஸ்வராய வித்மஹே சாயாபுத்ராய தீமஹி தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்!

ஓம் சதுர்புஜாய வித்மஹே தண்டஹஸ்தாய தீமஹி தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்!

சனி ஸ்லோகம்

நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்

சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஸனைச்சரம்!

அர்த்தம்:

கண்ணின் மை போன்று கருமை நிறம் கொண்டவனே! சூரியனின் மைந்தனே! எமதர்மனின் சகோதரனே! சாயாதேவியின் வயிற்றில் பிறந்தவனே! மெதுவாகச் சஞ்சாரம் செய்பவனே! சனிபகவானே! உன்னைப் போற்றுகிறேன்.

பொதுவான பரிகாரங்கள்

  • தினமும் வினாயகர் – ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது சிறந்த பலனைத் தரும்.
     
  • தினமும் வினாயகர் அகவல் – ஹனுமான சாலீசா – சுந்தரகாண்டம் பாராயணம் செய்வது நல்ல பலன்களைப் பெற்றுத் தரும்.
     
  • அடிக்கடி மஹாகணபதி ஹோமம் அல்லது பஞ்சமுக ஆஞ்சநேயர் ஹோமம் செய்வதும் நிறைவான மாற்றத்தைக் கொடுக்கும்.
     
  • தினமும் முன்னோர்கள் வழிபாட்டைச் செய்வது – குறைந்தபட்சம் அமாவாசை தினத்தன்றாவது முன்னோர்களை வழிபடுவது பலம் சேர்க்கும்.
     
  • தினமும் காகத்திற்கு சாதம் வைப்பது மிகச் சிறந்த பரிகாரமாகும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459