அரசு நிதி உதவி பெறும் தொடக்க / நடுநிலை பள்ளிகளுக்கு 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கு 01.08.2026 நிலவரப்படி ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப பணியாளர் நிர்ணயம் செய்யப்பட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. அவ்வாணையின்படி ஆசிரியருடன் உபரி பணியிடத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு நிரப்பத்தகுந்த காலிப்பணியிடங்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு நாளை 27.11.2026 அன்று காலை 10.00 மணியளவில் சிவகாசி, மாவட்டக் கல்வி அலுவலகத்தில் (தொடக்கக்கல்வி) வைத்து நடைபெற உள்ளது. இணைப்பில் கண்ட பட்டியலில் உள்ள ஆசிரியர்களை நாளை நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ள அறிவுறுத்திடுமாறு சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வட்டாரக்கல்வி அலுவலர் சிவகாசி
Deo proceedings: CLICK HERE


No comments:
Post a Comment