பணி வரன்முறைக்கு முந்தைய கால பணியும் ஓய்வூதிய பலன்களுக்கு கணக்கிடப்பட வேண்டும் -உச்ச நீதிமன்றம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


09/09/2026

பணி வரன்முறைக்கு முந்தைய கால பணியும் ஓய்வூதிய பலன்களுக்கு கணக்கிடப்பட வேண்டும் -உச்ச நீதிமன்றம்


* ​பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் வழங்கிய உத்தரவை (14.01.2020) எதிர்த்து இந்த மேல்முறையீடு செய்யப்பட்டது. தற்காலிக, ஒப்பந்த அல்லது தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி, பின்னர் ஆகஸ்ட் 2004-இல் பணி வரன்முறைப்படுத்தப்பட்ட (regularized) ஊழியர்களின் பழைய சேவைக் காலத்தை ஓய்வூதியத் தகுதிக்கான சேவையாகக் கணக்கிட வேண்டுமா மற்றும் 01.01.2004 முதல் அமலுக்கு வந்த புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்குப் பதிலாக பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அவர்களைக் கொண்டுவர வேண்டுமா என்பதே முக்கியப் பிரச்சினையாக இருந்தது.


* (23.01.2001): பஞ்சாப் அரசு, 3 ஆண்டுகள் பணி முடித்த தற்காலிக ஊழியர்களை வரன்முறைப்படுத்துவதற்கான கொள்கை அறிவிப்பை வெளியிட்டது.


* 01.01.2004 முதல் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்ததால், ஆகஸ்ட் 2004-இல் வரன்முறைப்படுத்தப்பட்ட இவர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டப் பலன்களை வழங்க வாரியமும்  , பஞ்சாப் மாநில அரசும் மறுத்தன

பணி வரன்முறைப்படுத்தப்படுவதற்கு முன்பு ஆற்றிய தற்காலிக/தினக்கூலி சேவைக் காலமும் ஓய்வூதியத் தகுதிக்குரிய சேவையாகக் (Qualifying Service) கணக்கிடப்பட வேண்டும்

* முந்தைய சேவைக் காலம் கணக்கிடப்படுவதால், இவர்கள் 01.01.2004-க்கு முன்பே பணியில் சேர்ந்தவர்களாகவே கருதப்படுவர். எனவே, இவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (GPF Pension Scheme) பலன்களைப் பெற முழுத் தகுதியுடையவர்கள். 

* மிகச் சிறப்பான தீர்ப்பு

* சட்ட வழிகாட்டல் பெற தொடர்பு கொள்க

ஆ.மிகாவேல் ஆசிரியர், மணப்பாறை

Click here court order 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459