பள்ளிக்கல்வித் துறையில் புதிய பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக துறைசெயலர் ப.சந்தரமோகன் வெளியிட்ட அரசாணை: பள்ளிக்கல்வித் துறையின் அரசு தேர்வுத்துறையில் புரோகிராமர், தமிழ்நாடு பொது சார்நிலை பணியின்கீழ் கான்சோல் ஆபரேட்டர் மற்றும் மெஷின் சூப்பர்வைசர், தமிழ்நாடு கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பணியில் உடற்கல்வி பாடவிரிவுரையாளர் ஆகியபதவிகள் உருவாக்கப்படுகின்றன என கூறப்பட்டுள்ளது.
விரைவில் அந்த பதவிகளுக்கு நேரடி நியமனம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடற்கல்வி விரிவுரையாளர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாகவும் புரோகிராமர்,கான்சோல் ஆபரேட்டர் மற்றும் மெஷின் சூப்பர்வைசர் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமாகவும் நிரப்பப்படும்



No comments:
Post a Comment