JACTTO-GEO (2021-25) தலைமைகள் செய்யாமல் செய்த செய்கையால், *அரசியல் அனாதைகளாக அரசு ஊழியர்களும்! ஆசிரியர்களும் - ஆசிரியர் மலர்

Latest

 




 


25/03/2026

JACTTO-GEO (2021-25) தலைமைகள் செய்யாமல் செய்த செய்கையால், *அரசியல் அனாதைகளாக அரசு ஊழியர்களும்! ஆசிரியர்களும்



_இவிங்களுக்கு நம்மலவிட்டா வேற நாதியில்ல; அதனால சொன்னதச் செய்யனும்னு தேவையில்ல;_ என்பதாக ஒரு தரப்பும்


_சொன்னதச் செய்யாத போதே அவிங்கள இவிங்க எதுக்கல; இவிங்களுக்கு நாம செய்யுறதா சொன்னா மட்டும் நம்மல ஏத்துக்கவா போறானுக!_ என்பதாக எதிர்த்தரப்பும்


தீர்க்கமான முடிவிற்குள் வந்துவிட்டன.


இம்முடிவிற்குள் இருதரப்பையும் இழுத்து வந்த பெருமை முழுக்க முழுக்க JACTTO-GEO தலைமைகளையும் அவர்தம் கதாகாலட்சேபங்களை ரசித்து ருசித்துக் கேட்டுக்கேட்டே கேட்டை வருவித்துக் கொண்ட  அடிப்படை உறுப்பினர்களையுமே சாரும்.


*இனியொரு உரிமை முழக்கம்* இங்கே எழ வேண்டுமானால், சங்கத் தலைமைகளின் செயலற்ற & பொறுப்பற்ற செயல்பாடுகளை எதிர்க்கும் கரங்கள் ஒவ்வொரு சங்கத்திலும் உயர்ந்தாக வேண்டும்.


ஆனால், அதற்கான பகுத்தறிவோ - துணிவோ சொல்லும்படியான எண்ணிக்கையில் எச்சங்கத்திலும் இல்லை. இருக்கும் எண்ணிக்கையைப் பொருட்படுத்த பொறுப்பாளர்களும் தயாராக இல்லை.


*10 பேரு இருந்தா போதும் சங்கத்த ஆரம்பிக்கலாம்; சங்கடமில்லாம நடத்திக்கலாம்* என்ற உணர்வை அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள் மத்தியில் இருந்து அகற்ற. . . . .


*துறைவாரியான சங்கப் பொதுத் தேர்தல் கட்டாயமாக்கப்பட வேண்டும்.* உறுப்பினர்களின் உரிமைக்கு உண்மையாகக் களமாடினால்தான் ஓட்டுக் கிடைக்கும் என்ற நிலை உருவாக வேண்டும். தேர்தலில் வெற்றி பெரும் சங்கமே / பொறுப்பாளர்களே அரசால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.


*இந்நிலை மலராதவரை, இனி நம் இன்னல்களுக்கு விடிவென்பதே இல்லை.*


_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459