நான் ஒரு அரசு ஊழியரின் மகன், ஊழியர்களின் வலியை நான் நன்கு அறிவேன்" ஆதலால் பழைய ஓய்வூதிய திட்டம் தொடரும் - ஆசிரியர் மலர்

Latest

 




 


15/02/2026

நான் ஒரு அரசு ஊழியரின் மகன், ஊழியர்களின் வலியை நான் நன்கு அறிவேன்" ஆதலால் பழைய ஓய்வூதிய திட்டம் தொடரும்


 "நான் ஒரு ஊழியரின் மகன், ஊழியர்களின் வலியை நான் நன்கு அறிவேன்"


"எத்தகு நிதிச்சூழலிலும்

பழைய ஓய்வூதியத்திட்டம் (OPS)  தொடரும்" !


-ஹிமாச்சலப்பிரதேச மாநில முதலமைசச்ர்

சுக்விந்தர் சிங் சுகு அறிவிப்பு!


++++++++++++++++++++++++++


ஹிமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு, மத்திய நிதி அமைச்சகத்தின் பரிந்துரைகளைத் தள்ளிவைத்து விட்டு, எத்தகு நிதிச்சூழலிலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) தொடர்ந்து செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளார். 


2026 பிப்ரவரி மாத நிலவரப்படி, மாநிலத்தின் நிதி நெருக்கடிக்கு தீர்வாக ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (UPS) மாறுமாறு ஒன்றிய அரசின் நிதித்துறை பரிந்துரைத்த போதிலும், அவர் அதனை நிராகரித்துள்ளார். 


பழைய ஓய்வூதியத்திட்டம் (OPS)குறித்து

முதலமைச்சர் முக்கியமான அறிவிப்புகள் வெளியிட்டு உள்ளார்.


பழைய ஓய்வூதியத்திட்டம்

(OPS) தொடரும் என்று ஹிமாச்சலப்பிரதேச முதலமைச்சர்  தெளிவுப்படுத்தி உள்ளார்.

நிதித்துறையின் எச்சரிக்கைகளையும் மீறி, 1.35 லட்சம் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்ந்து வழங்கப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.


மத்திய அரசு வருவாய் பற்றாக்குறை மானியத்தை (RDG) நிறுத்தியுள்ள போதிலும், மாநிலம் தனது சொந்த வருவாய் ஆதாரங்கள் மூலம் நிதி நிலைத்தன்மையை எட்டும் என்று முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 


கடந்த மூன்று ஆண்டுகளில் மாநிலம் ₹3,500 கோடி முதல் ₹3,800 கோடி வரை கூடுதல் வருவாயை ஈட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


 "நான் ஒரு ஊழியரின் மகன், ஊழியர்களின்  வலியை  நான் நன்கு உணர்வேன்-அறிவேன்" 

என்று கூறிய ஹிமாச்சலப்பிரதேசத்தின் முதலமைச்சர், ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் அல்லது எந்தவொரு நலத்திட்டங்களும் நிறுத்தப்படாது என்று உறுதியளித்துள்ளார்.


ஒன்றிய அரசின் UPS ஓய்வூதியத்திட்டத்திற்கு  மாறினால் ₹1,800 கோடி கூடுதல் கடன் வாங்க மத்திய அரசு அனுமதிக்கும் என்ற மத்திய அரசின்

பரிந்துரையை ஹிமாச்சல் பிரதேசத்தின் முதல்வர்

நிராகரித்துள்ளார். மேலும், மாநில அரசு செலுத்தியுள்ள

₹9,000 கோடி வரையிலான NPS பங்களிப்பை மத்திய அரசிடம் இருந்து திரும்பப் பெற மாநில அரசு போராடி வருகிறது என்றும் கூறிஉள்ளார்‌. 


மத்திய அரசின் நிதி அழுத்தங்களுக்கு இடையிலும், ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பிற்காக OPS ஓய்வூதியத்திட்டத்தை

தொடர்ந்து  தக்கவைப்பதே தற்போதைய ஹிமாச்சலப் பிரதேச அரசின் கொள்கையாக உள்ளது. 

OPS ஓய்வூதியத்திட்ட

விஷயத்தில்  ஹிமாச்சலப்பிரதேச மாநில அரசு உறுதியாக உள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459