BREAKING | அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் குறித்து அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின் - ஆசிரியர் மலர்

Latest

 




 


03/01/2026

BREAKING | அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் குறித்து அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்



தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் இருபதாண்டு காலக் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய புதிய திட்டமான "தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைச் (Tamil Nadu Assured Pension Scheme - TAPS)" செயல்படுத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும்.


50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு பணியாளர்களின் 10% பங்களிப்பு எடுக்கப்படும்.


ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவர் ஏற்கனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்றுவந்த ஓய்வூதியத்தில், 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

💥 10 ஆண்டுகள் பணியாற்றினாலே ஓய்வூதியம் வழங்கப்படும் - முதல்வர்.


ஓய்வூதியம் பெறுவோருக்கு 6 மாதத்துக்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு இணையாக அகவிலைப்படி அறிவிக்கப்படும்.


ஓய்வூதிய நிதியத்துக்கு தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.


அரசு ஊழியர்களின் 20 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றும் வகையில் ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

💥 ரூ.25 லட்சம் மிகாமல் பணிக்கொடை - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.


அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும் பணிக்காலத்திற்கேற்ப ரூ.25 லட்சம் மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்.


தகுதி பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் ஓய்வு பெறுவோருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம்.


ஓய்வூதியம் இன்றி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம்.


TAPS திட்டத்தை அறிமுகப்படுத்துவதால் ஓய்வூதிய நிதியத்திற்கு கூடுதலாக ரூ.13,000 கோடி அளிக்க வேண்டும்.


அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை காத்திடும் பொருட்டு கூடுதல் செலவினங்களை அரசே முழுமையாக ஏற்கும்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459