2.0 ஆட்சி – முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
இடியாப்ப சிக்கல் போன்ற சூழலில் தான் திமுக ஆட்சிக்கு வந்தது; எங்களின் சாதனைகளை மிஞ்சும் அளவுக்கு திமுக 2.0 ஆட்சி இருக்கும் - சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
_முதல்வரின் அறிவிப்புகள்_
கலைஞர் கனவு இல்லத்தின் கீழ் புதிதாக 1 லட்சம் வீடுகள் கட்டப்படும்
புதிதாக 2,600 கி.மீ கிராம சாலைகள் மேம்படுத்தப்படும்
சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதிதாக 1.80 லட்சம் நபர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்
சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.3,400ஆக உயர்த்தப்படும். இவர்களது பணி நிறைவில் வழங்கப்படும் ஒட்டு மொத்த தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும்
அங்கன்வாடி, சமையல் உதவியாளர்கள், தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் ரூ.3,000ஆக உயர்த்தப்படும்.
சிறப்பு ஓய்வூதியம் பெறும் சமையலர்கள், அங்கன்வாடி மற்றும் சமையல் உதவியாளர்கள், தூய்மை பணியாளர்கள் இறந்த பின் குடும்பத்தினருக்கு ரூ.1,000 ஓய்வூதியமாக வழங்கப்படும்
பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய சிறப்பு மதிப்பெண் அளிக்கப்படும்.


No comments:
Post a Comment