TET பதவி உயர்வு வழக்கு கடந்து வந்த பாதை- இரத்தின சுருக்கமாக:- - ஆசிரியர் மலர்

Latest

 




 


19/12/2025

TET பதவி உயர்வு வழக்கு கடந்து வந்த பாதை- இரத்தின சுருக்கமாக:-

 


🟢  1:-  மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் முதன் முதலாக தொடங்கப்பட்ட WP ல் TET மனுதாரர்கள் வெற்றி பெற்றார்கள்.

( *JUDGEMENT DATE:- 20-10-2022*)


🟣 * 2:-  மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் அது இரண்டு நீதியரசர்கள் அமர்வுக்கு மாற்றப்பட்டு WA யில் இரண்டாவது முறையாக TET மனுதாரர்கள் மீண்டும் வெற்றி பெற்றார்கள்.

(*JUDGEMENT DATE:- 02-06-2023*)


🔴 * 3:-  உச்ச நீதிமன்றத்தில் SLP/CAVIET/CA மனுக்களில் மீண்டும் TET மனுதாரர்கள் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார்கள்.

(*JUDGEMENT DATE:- 01-09-2025*)


🟢 * 4:- உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தாங்கள் முழு தகுதி உள்ளவர்களாக இருப்பதும், பதவி உயர்வு கலந்தாய்வு 4 கல்வி ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருப்பதுவும், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பதவி உயர்வு காலிப்பணியிடங்கள் தோராயமாக 6000 எண்ணிக்கையில் இருப்பதும் காரணம் காட்டி, வரிசைப்படி அனைத்து TET ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்குக என்று, அனைத்து TET 2012/2014 ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் WP யில் TET மனுதாரர்கள் நான்காவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்கள்.(JUDGEMENT DATE:- 28-11-2025)

➖➖➖

WP யில் ஆரம்பித்து மீண்டும் WP யில் முடித்துள்ளோம்.

➖➖➖

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்ட வழக்கு, மூன்றாண்டுகளுக்கு பிறகு மீண்டும் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் முடிக்கப்பட்டுள்ளது.

➖➖➖

வழக்கு ஆரம்ப நிலையிலேயே முதல் கட்ட விசாரணையில் முழுவதுமாக புரிந்து கொள்ளப்பட்டு,ஏற்றுக்கொள்ளப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு மாணவர்களின் கல்வி நலனை மட்டும் கருத்தில் கொண்டு சட்ட விதிகளின்படி முறையாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கு 99.99 % மேல்முறையீடு செல்லாது என்பதாக புரிந்து கொள்வோம்.

➖➖➖

பதவி உயர்வு சார்ந்து முதன் முதலாக வழக்கு தொடரப்பட்ட தேதி இந்த வழக்கின் பயணம் தொடங்கிய தேதி

பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

05-08-2022 ல் பதவி உயர்வு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது என்பதை நீங்கள் அனைவரும் அறிந்து கொள்வீராக*

➖➖➖

இதுவரை தீர்ப்பு வழங்கிய 6 நீதி அரசர்களின் பெயர்களையும் அறிந்து கொள்வீராக:-


*SINGLE BENCH AT MADRAS HIGH COURT*

1) திரு கிருஷ்ண குமார்

 

*DOUBLE BENCH AT MADRAS HIGH COURT*

2) திரு மகா தேவன் 

3) திரு முகமது சபீக் 


*DOUBLE BENCH AT SUPREME COURT OF INDIA*

4) திரு திபன்கர் தத்தா 

5) திரு மன்மோகன் 


*SINGLE BENCH AT MADRAS HIGH COURT*

6) திரு இளந்திரையன்

➖➖➖

வழக்கு தொடங்கப்பட்ட நாள் முதல் இதுவரை *6 IAS அதிகாரிகள் கல்வித்துறை செயலாளர்/ஆணையர் நிலையில் பணியிட மாற்றம் மற்றும் பணி ஓய்வு பெற்றுள்ளார்கள்* என்பது குறிப்பிடத்தக்கது.


➖➖➖


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459