இன்று காலை 10.00 மணியளவில் அமைச்சருடன் டிட்டோஜாக் பேரமைப்பின் பேச்சு வார்த்தையின் இறுதியில் கல்வி அமைச்சர் நமது கோரிக்கைகளை சார்ந்து உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்க இரண்டு நாட்கள் கால அவகாசம் கேட்டுள்ளார்.
அதைத்தொடர்ந்து இன்று 3 மணிக்கு டிட்டோஜாக் பேரமைப்பின் உயர்மட்ட குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
அமைச்சரின் பதிவு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்களின் வழிகாட்டுதலின்படி , தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு ( டிட்டோஜாக் ) நிர்வாகிகளுடன் இன்று பேசுவார்த்தை நடத்தினோம்.
10 அம்சக் கோரிக்கைகளை முன்னிறுத்தி இப்பேச்சுவார்த்தை நடைபெற்றது . கோரிக்கைகளை உடனடியாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கனிவான கவனத்திற்கு எடுத்துச் சென்று நிறைவேற்றிட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தோம் .





No comments:
Post a Comment