🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
⛑️⛑️ஆசிரியர்கள்,அரசு ஊழியர்களின் பாதுகாவலராக இருந்த முத்தமிழறிஞர் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின்
வேலைவாய்ப்பு செய்திகள் 2025
7 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.⛑️⛑️பள்ளிக் கல்வி இணை இயக்குநர்கள் இடமாற்றம் - அரசாணை வெளியீடு & முதன்மைக் கல்வி அலுவலர்கள் இணை இயக்குநர்களாக பதவி உயர்வு - அரசாணை வெளியீடு. ⛑️⛑️9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி உருவாக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.
⛑️⛑️பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகளை அடையாளம் காணுதல் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளுதல் பள்ளியில் சேர்த்தல் மற்றும் தக்கவைத்தல் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான வழிகாட்டுதல்கள் - SPD PROCEEDINGS வெளியீடு. ⛑️⛑️அடிப்படை ஆங்கில மொழித்திறன் வளர்த்தல் - ஆகஸ்ட் மாத திறன் வளர் செயல்பாடுகள் அட்டவணை வெளியீடு.
⛑️⛑️ITI மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு: வேலைவாய்ப்பு பயிற்சித்துறை அறிவிப்பு வெளியீடு. ⛑️⛑️4 உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்கி பள்ளிக் கல்வி இயக்குனர் உத்தரவு.
⛑️⛑️பள்ளி மாணவர்களுக்கு ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் - இந்திய அஞ்சல் துறையின் மூலம் மேற்கொள்ள அனுமதித்து அரசாணை வெளியீடு.
⛑️⛑️போதை ஒழிப்பு தொடர்பாக SLOGAN போட்டி நடத்துதல் தொடர்பாக இயக்குனரின் செயல்முறைகள் வெளியீடு.
⛑️⛑️Special Cash Incentive - தவறுதலாக உள்ள மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை சரி செய்து அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு
⛑️⛑️உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கு மதிப்பீடு தேர்வு (Assessment) - பள்ளிக் கல்வித் துறையின் செயல்முறைகள் வெளியீடு.
⛑️⛑️பள்ளிக் கல்வி இணை இயக்குநர்கள் இடமாற்றம் - அரசாணை வெளியீடு.
👉இணை இயக்குனர் நிர்வாகம் ராமசாமி சார்
👉இணை இயக்குனர் தனியார் பள்ளிகள் மார்ஸ் சார்
👉இணை இயக்குனர் இடைநிலை கல்வி அய்யண்ணன் சார்
👉இணை இயக்குனர் தொடக்கக்கல்வி நிர்வாகம்
பொன்னையா சார்
⛑️⛑️2025-2026ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் தொடர்பான விவரங்களை Udise+ தளத்தில்` 30.09.2025க்குள் முடிக்க மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு. ⛑️⛑️முதுகலை ஆசிரியர் தாவரவியல் / விலங்கியல் / உயிரியல் பணியிடத்தை பள்ளி அளவைப் பதிவேட்டில் முறையாக பதிவு செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (HS) உத்தரவு.
⛑️⛑️தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும்: அன்புமணி
⛑️⛑️வெளிநாட்டு பல்கலை. அங்கீகாரமற்ற படிப்புகள் - மாணவர்களுக்கு யுஜிசி எச்சரிக்கை
⛑️⛑️11, 12-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்: பள்ளிகளில் இன்று முதல் விநியோகம் செய்யப்படவுள்ளது.
⛑️⛑️75 சதவீத வருகை பதிவு இருந்தால் மட்டுமே பொதுத்தேர்வு எழுத அனுமதி: சிபிஎஸ்இ உத்தரவு.
⛑️⛑️பள்ளிகளிலேயே ஆதார் பயோ மெட்ரிக் புதுப்பிக்க ஏற்பாடு: பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு
👉சென்னை: பள்ளி மாணவர்களுக்கு ஆதார் பயோ மெட்ரிக் புதுப்பித்தலை அஞ்சல் துறையின் மூலம் மேற்கொள்ள அனுமதித்து பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை செயலர் பி.சந்தரமோகன் வெளியிட்டுள்ள அரசாணை விவரம்: பள்ளி மாணவர்களின் நலனுக்காக 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து நிலை மாணவர்களும் இடைநிற்றல் இல்லாமல் தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக உதவித் தொகைகள் மற்றும் ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித் தொகை அனைத்து மாணவர்களுக்கும் குறித்த நேரத்தில் முறையாக சென்று சேருவதை உறுதி செய்யும் விதமாக, நேரடி பயனாளர் பரிமாற்றம் (டிபிடி) மூலம் வங்கிக் கணக்குக்கு நேரடியாக செலுத்திடும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதை மேற்கொள்வதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு வங்கிக் கணக்கு கட்டாயம் தேவைப்படுகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு புதிதாக வங்கிக் கணக்கு துவங்குவதற்கு ஆதார் எண் அவசியமாகிறது. எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கட்டாய பயோ மெட்ரிக் விவரங்களுடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டை பெற வேண்டியது அவசியமாகும்.
அதன்படி 5 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவர்கள் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இவர்களில் 5 முதல் 7 வயதுக்கு உட்பட்டவர்கள் முதல் முறை கட்டாய பயோ மெட்ரிக் விவரங்களை புதுப்பித்தல் வேண்டும். அதேபோல் 15 முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் 2-வது முறை கட்டாய பயோ மெட்ரிக் புதுப்பித்தல் மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே, பள்ளிக் கல்வித் துறையில் பயின்று வரும் 5 முதல் 17 வயதுக்குட்பட்ட சுமார் 15 லட்சம் மாணவர்களுக்கு கட்டாய பயோ மெட்ரிக் விவரங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும்.
இந்திய தபால் துறையானது பள்ளி மாணவர்களுக்கு பயிலும் பள்ளியிலேயே முகாம் அமைத்து அஞ்சல் சேமிப்பு கணக்கு தொடங்கும் பணிகளை கடந்த ஆண்டு முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இத்துடன் சேர்த்து மாணவர்களுக்கு ஆதார் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்வது எளிதானது என இந்திய அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இந்திய அஞ்சல் துறையானது ஆதார் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் பணியை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது.
அஞ்சல் குறியீட்டு எண் அடிப்படையில் பள்ளிகள் பட்டியலிடப்பட்டு, அஞ்சலகப் பணியாளர்கள் மூலம் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் பணி மேற்கொள்ள ஒப்புதல் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த பணியானது ஆகஸ்ட் தொடங்கி வரும் டிசம்பர் மாதத்துக்குள் 2 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட உள்ளன. இதன் மூலம் 15 லட்சம் மாணவர்களின் ஆதார் கட்டாய பயோமெட்ரிக் விவரம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
⛑️⛑️நடப்பாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெளிநாட்டு மொழி, தொழில்சார்ந்த படிப்புகள் கட்டாயம்
⛑️⛑️ராமேஸ்வர மீனவர்கள் 14 பேர் கைது
தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது
விசைப்படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்த நிலையில் மீனவர்கள் அதிர்ச்சி
எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை அட்டூழியம் - உரிய நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை
⛑️⛑️"இந்தியாவுக்கு மேலும் வரி உயர்வு
- டிரம்ப் எச்சரிக்கை"
இந்தியாவுக்கான இறக்குமதி வரியை
அதிகரிக்கப் போவதாக அமெரிக்க
அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி அறிவிப்பு
⛑️⛑️கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் காலியாக உள்ள 2000 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு
மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் அறிவிப்பு வெளியீடு
ஆகஸ்ட் 29ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். ⛑️⛑️தற்காலிக தொழிலாளர்களுக்கு ரூபாய் 5,00,000 வரையிலான விபத்து மற்றும் இயலாமை காப்பீடு : அரசாணை வெளியீடு.
⛑️⛑️பிரதமர் மோடி சீனாவுக்கு பயணம்; ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பு. ⛑️⛑️துரதிஷ்டவசமானது... நியாயமற்றவை
“எண்ணற்ற நாடுகள், தங்கள் நாட்டின் நலனுக்காக செய்வதையே இந்தியாவும் செய்தது.
இருந்தபோதிலும் இந்தியா மீது கூடுதல் வரியை விதிப்பதாக அமெரிக்கா எடுத்துள்ள முடிவு துரதிர்ஷ்டவசமானது
இந்த நடவடிக்கைகள் முழுக்க முழுக்க நியாயமற்றவை.
தேசிய நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா எடுக்கும்".
-வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் - ரன்தீர் ஜெய்ஸ்வால்
⛑️⛑️பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது குறித்து விவரம் தர தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆக.9க்குள் விவரங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜல் பியான், கோட்டீஸ்வர் சிங் அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
⛑️⛑️முதல்வரின் பெயர், படத்தை பயன்படுத்த அனுமதி"
தமிழக அரசு திட்டங்களில் முதல்வரின் பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்த தடை விதித்த சென்ன உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு.
வழக்கு தொடர்ந்த அதிமுக எம்பி சி.வி.சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம்..
⛑️⛑️எம்பி சுதாவிடம் செயின் பறித்த நபர் கைது.
டெல்லியில் நடைபயிற்சி மேற்கொண்டபோது மயிலாடுதுறை எம்பி சுதாவிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை கைது செய்து செயினை மீட்ட டெல்லி போலீசார்.
எம்பி சுதாவின் கழுத்தில் இருந்து பறித்துச் செல்லப்பட்ட 4 சவரன் தங்கச் சங்கிலி மீட்பு. ⛑️⛑️300-க்கும் மேற்பட்ட ஊழியர்களை நீக்கிய பல்கலை.
நிதி நெருக்கடியை சுட்டிக்காட்டி 360-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்தது அமெரிக்க ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம்.
பாலஸ்தீன ஆதரவு போராட்டம் உள்ளிட்டவற்றுக்காக நிதி உதவியை டிரம்ப் நிர்வாகம் நிறுத்திய நிலையில் நடவடிக்கை.
⛑️⛑️"எந்த ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சியும் கேப்டன் விஜயகாந்த் படத்தை பயன்படுத்த கூடாது".
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி ⛑️⛑️சென்னை மாநகரில் பெண் காவல் ஆய்வாளர்கள், எஸ்.ஐ., சிறப்பு எஸ்.ஐ., காவலர்கள் மற்றும் 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இரவு நேர ரோந்துப் பணியில் இருந்து விலக்கு அளிக்க உத்தரவு
⛑️⛑️இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி"
14 ஆண்டுகளுக்குப்பின் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது
கடந்த 2010-11ல் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி 13.12 சதவீதமாக இருந்தது
-அமைச்சர் தங்கம் தென்னரசு
⛑️⛑️ஆழ்வார்ப்பேட்டை - சென்னை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்திப்பு.
சாதி ஆணவ படுகொலைகளைத் தடுக்கும் வகையில் தனி சட்டம் இயற்ற வலியுறுத்தி வீசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூ. மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் சந்திப்பு.
⛑️⛑️தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி உயர்வு"
`Talk of the Nation' - தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.19%ஆக உயர்ந்துள்ளது
இரட்டை இலக்க வளர்ச்சியை தமிழகம் கண்டுள்ளது, திமுக ஆட்சியில் தான் தமிழகத்தின் பொருளாதாரம் அதிகரிக்கிறது
14 ஆண்டுகளுக்கு முன் திமுக ஆட்சியில் இறுதியாக இரட்டை இலக்கம் 11.15%ஆக இருந்தது
-முதல்வர் ஸ்டாலின்
⛑️⛑️டெலிவரி ஊழியர்கள் E-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்.. ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு
⛑️⛑️புதுக்கோட்டை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் தொண்டைமான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்
⛑️⛑️அரசியல் சண்டைகள் என்பது தேர்தல் களத்தில்தான் இருக்க வேண்டுமே தவிர நீதிமன்றங்களில் இருக்கக் கூடாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து
⛑️⛑️உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் அரசியல் கட்சிகள் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்த தடை கிடையாது உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️🌹⛑️⛑️
🌹🌹தங்கம் விலை மீண்டும் ரூ.75 ஆயிரத்தை நெருங்கியது - நகை வியாபாரிகள் கூறுவது என்ன?
சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.600 அதிகரித்து, மீண்டும் ரூ.75 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
ஜனவரி மாத தொடக்கத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.58 ஆயிரமாக இருந்தது. பின்னர், போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஜூலை 23-ம் தேதி ரூ.75,040 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. பின்னர் தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்த நிலையில், கடந்த 2-ம் தேதி முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், நேற்று பவுனுக்கு ரூ.600 அதிகரித்து ரூ.74,960-க்கும், கிராமுக்கு ரூ.75 அதிகரித்து ரூ.9,370-க்கும் விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கம் ரூ.81,768-க்குவிற்பனை செய்யப்பட்டது. கடந்த 4 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,760 உயர்ந்துள்ளது. தற்போது பவுன் ரூ.75 ஆயிரத்தை நெருங்கியுள்ளதால் நகை வாங்குவோர் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
இதேபோல, வெள்ளியும் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.125-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,000 உயர்ந்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது. சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கப் பொதுச் செயலாளர் சாந்தகுமார் கூறும்போது, "இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த 25 சதவீத வரி காரணமாக, இதுவரை இல்லாத வகையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.87.80-ஆக சரிந்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
ஆவணி மாதத்தில் சுபமுகூர்த்த நாட்களில் திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள் நடைபெறும் என்பதால் உள்நாட்டு சந்தையிலும் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் வரும் நாட்களிலும் தங்கம் விலை உயரவே வாய்ப்புள்ளது. நடப்பாண்டு இறுதிக்குள் கிராம் ரூ.10 ஆயிரத்தை எட்டக்கூடும்" என்றார்.
⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️
🌹🌹அறுபடைவீடுகளுக்கு ஆன்மிகப் பயணம்.. இனி இலவசமா சுற்றுலா போகலாம். விண்ணப்பிப்பது எப்படி?
👉இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மானசரோவர் மற்றும் முக்திநாத் ஆகியவற்றிற்கு ஆன்மிகப் பயணம் சென்று வருபவர்களுக்கு ஆண்டுதோறும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதோடு, ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் வைணவ திருக்கோயில்களுக்கும், இராமேசுவரத்திலிருந்து காசிக்கும், அறுபடை வீடுகளுக்கும் பக்தர்கள் கட்டணமில்லாமல் ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.
2025 – 2026 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் தமிழ் கடவுள் என்று போற்றப்படுகின்ற முருகப் பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றிற்கு மூத்த குடிமக்கள், ஒரேமுறையாக சென்று தரிசனம் செய்திடும் வகையில் கட்டணமில்லாமல் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட 2,000 பக்தர்கள் அழைத்து செல்லப்பட உள்ளனர்.
ஆன்மிகப் பயணம் செல்ல விரும்பும் பக்தர்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், 60 வயதிற்கு மேல் 70 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருப்பதோடு, அதற்கான வருமான சான்றிதழை வட்டாட்சியரிடமிருந்து பெற்று இணைக்க வேண்டும். போதிய உடல் தகுதி உள்ளதற்கான மருத்துவ சான்றுடன், ஆதார் நகல் இணைக்கப்பட வேண்டும்.
இந்த ஆன்மிகப் பயணத்திற்கான விண்ணப்ப படிவங்களை அந்தந்த மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் நேரில் பெற்றோ அல்லது www.hrce.tn.gov.in என்ற இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட
| TEACHERS NEWS |
அறுபடைவீடு ஆன்மிகப் பயணம் தொடர்பான விவரங்களுக்கு துறையின் இணையதளத்திலோ அல்லது 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம்.
ஆகவே, இந்த ஆன்மிகப் ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் தகுதியுடைய மூத்த குடிமக்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பை கொடுப்பதிலும் பெறுவதிலும் தான் இன்பம் இருக்கிறது. என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர், மாவட்டச் செயலாளர்
&தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில அமைப்பாளர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926


No comments:
Post a Comment