2342 இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமனம் வழங்குவதில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்த அறிவுரைகள் - DEE Proceedings - ஆசிரியர் மலர்

Latest

 




 


09/07/2025

2342 இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமனம் வழங்குவதில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்த அறிவுரைகள் - DEE Proceedings

 IMG_20250709_172738

தொடக்கக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு / ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி / ஊராட்சி ஒன்றிய தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் - வழங்குவதில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்து அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கையின் படி அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தேர்வில் தகுதி பெற்று மதிப்பெண்கள் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 2342 எண்ணிக்கையிலான பணிநாடுநர்களின் தற்காலிகத் தெரிவர் பட்டியல் பார்வை 1 - ல் காணும் கடிதம் வாயிலாக பெறப்பட்டுள்ளது . மேற்கண்டவாறு பெறப்பட்ட பணிநாடுநர்களுக்கு பணி நியமன இடம் தேர்வு செய்யும் வகையில் தொடக்கக் கல்வி இணை இயக்குநர் ( நிர்வாகம் ) அளவில் சென்னையில் நேரடி கலந்தாய்வு முறையில் பணி நியமன ஆணை வழங்கப்படவுள்ளது எனவும் , அத்துடன் தெரிவு செய்து பெறப்பட்ட பணிநாடுநர்களின் வீட்டு முகவரியுடன் கூடிய பெயர்பட்டியல்கள் பார்வை 2 ல் காணும் செயல்முறைகள் வாயிலாக அனைத்து மாவட்டக் கல்வி அலுவலருக்கும் அனுப்பிவைக்கப்பட்டது . அதன் பொருட்டு இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு தெரிவு பெற்ற பணிநாடுநர்களுக்கு 14.07.2025 முதல் 18.072025 வரை கீழ்க்கண்ட அட்டவணைப்படி நேரடி முறையில் இடஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது .

sgt_trb_appointment instruction.pdf

👇👇👇

Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459