School morning prayer activities 6.6.2025 - ஆசிரியர் மலர்

Latest

 




 


06/06/2025

School morning prayer activities 6.6.2025

 திருக்குறள்: 


குறள் 399:

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.

விளக்கம்:தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர்.

பழமொழி :

All things comes to those who wait. 

பொறுத்தார் பூமி ஆள்வார்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.புதிய கல்வியாண்டில் அனைவரிடமும் அன்புடன் நடந்து கொள்வேன்.

2.எனது கடமைகளை சரிவர செய்து அனைவரிடமும் நற்பெயர் எடுப்பேன்.

பொன்மொழி :

நல்ல விதை விதைத்தால் செடி நன்கு வளர்ந்து நல்ல பலன் கொடுக்கும். அதுபோல நல்ல எண்ணங்கள் இருந்தால் வாழ்க்கை பிரகாசிக்கும். - சாகர்

பொது அறிவு : 

01. சந்திராயன்-1 எந்த நாளில் நிலவுக்கு ஏவப்பட்டது?


2008 அக்டோபர் 22

02. சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைமையிடம் எங்குள்ளது?


லாசான்( ஸ்விட்சர்லாந்து)
Lausanne (Switzerland)

English words & Tips :

 habit    -      பழக்கம்

 dirty     -       அழுக்கு

TIPS

Changing a Singular Noun to a Plural Noun

* Adding ‘oes’ to nouns ending with an ‘o’ -      tomato - tomatoes.

* Adding ‘ies’ to words ending with a ‘y’ preceded by a consonant -      Baby - Babies

* Adding ‘s’ to words ending with a ‘y’ preceded by a vowel -      key - keys

அறிவியல் களஞ்சியம் :

 மூளையில் குருதி ஓட்டத்தைக் கண்காணிப்பது சுலபமல்ல. அஞ்சல்தலை அளவே உள்ள ஒரு புதிய கருவியை அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலை வடிவமைத்துள்ளது. மூளையில் அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்பம் வாயிலாக இந்தக் கருவி ரத்த ஓட்டத்தை அறிய உதவுகிறது.

நீதிக்கதை

 சமயோசித யுக்தியால் உயிர் தப்பிய நாய்



ஒரு காட்டில் காட்டுநாய் ஒன்று சுற்றித் திரிந்து கொண்டு இருந்தது. அப்போது ஒரு சிறுத்தைப்புலி தன்னை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்ததை அந்த காட்டுநாய் பார்த்தது.


நாயை பிடித்து தின்ன வேண்டும் என்பதுதான் சிறுத்தைப்புலியின் நோக்கம். எப்படி அதனிடம் இருந்து தப்பி செல்வது என்பது காட்டு நாயின் கவலை.


ஓடிச்செல்வதால் பயனில்லை. ஏனென்றால் எவ்வளவு வேகமாக ஓடினாலும் சிறுத்தைப்புலியின் அளவுக்கு காட்டு நாயால் வேகமாக ஓட முடியாது.


எனவே காட்டு நாய் உடனே மிக வேகமாக யோசிக்க தொடங்கியது. அருகில் சில எலும்புகள் கிடந்தன. அவற்றை பார்த்தும் உடனே அந்த காட்டு நாய்க்கு ஒரு யோசனை பிறந்தது.


சிறுத்தைப்புலியின் பக்கம் தன் முதுகை திருப்பிக்கொண்டு கீழே அமர்ந்து அந்த எலும்புகளை மென்று தின்பதுபோல் கடிக்க ஆரம்பித்தது. சிறுத்தைப்புலி அருகில் வந்து தன் மீது பாய்வதற்கு தயாரானபோது காட்டு நாய் உரத்த குரலில் சொன்னது….


”இப்போது நான் தின்று முடித்த சிறுத்தைப்புலி மிகவும் சுவையாக இருந்தது. அக்கம் பக்கத்தில் வேறு சிறுத்தைப்புலி கிடைக்குமா? என்று தேடிபார்க்க வேண்டும்” என்றது.

இதைக் கேட்டதும் பயந்து போய் சிறுத்தைப்புலி அப்படியே ஸ்தம்பித்து சிலைபோல் நின்று விட்டது.


இந்த காட்டு நாய் சிறுத்தைப்புலிகளையே கொன்று தின்று விடுகிறதே. அப்படியானால் எவ்வளவு பலம் வாய்ந்ததாய் இருக்க வேண்டும். இதனிடம் அகப்படாமல் தப்பி சென்றுவிட வேண்டும் என்று நினைத்து ஓசைப்படாமல் பின்னோக்கி சென்று அந்த சிறுத்தைப்புலி புதருக்குள் மறைந்துவிட்டது.


அருகில் இருந்த ஒரு மரத்தின் மீது உட்கார்ந்து இருந்த ஒரு குரங்கு நடந்ததை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தது. தனக்கு தெரிந்த தகவலை சிறுத்தைப்புலியுடன் பகிர்ந்து கொண்டு சிறுத்தைப்புலியுடன் பேரம் பேசி தனக்கு பாதுகாப்பு தேடிக்கொள்ளலாம் என்று அந்தக் குரங்கு கருதியது.


எனவே சிறுத்தைப்புலியை பின் தொடர்ந்து அந்தக்குரங்கு வேகமாக ஓடிச்சென்றது. காட்டு நாயும் இதை கவனித்தது. ஏதோ சதி நடக்கிறது என்பதை புரிந்துக்கொண்டது.


குரங்கு, சிறுத்தைப்புலியிடம் சென்று காட்டு நாய், சிறுத்தைப்புலியை எப்படி ஏமாற்றியது என்ற முழு விவரத்தையும் சொன்னது. சிறுத்தைப்புலிக்கு தாங்க முடியாத கோபமும், ஆத்திரமும் வந்தது.


அந்த காட்டு நாய் என்னையே ஏமாற்றலாம் என்று நினைக்கிறதா? அதற்கு மறக்க முடியாத பாடத்தை புகட்டுகிறேன்.


”இந்த காட்டில் யார் யாரை கொன்று தின்பார்கள் என்பதை காட்டுகிறேன்” என்று சொல்லிவிட்டு, “”குரங்கே வா. என் முதுகில் ஏறி உட்கார். 2 பேரும் அந்த காட்டு நாயை பிடிக்கலாம்” என்றது. குரங்கு, சிறுத்தைப்புலியின் முதுகில் ஏறி உட்கார்ந்தது.


இரண்டும் நாயை நோக்கி சென்றன. சிறுத்தையும், குரங்கும் சேர்ந்து வருவதை காட்டு நாய் பார்த்தது. இந்த திருட்டு குரங்கு என்னை இப்படி ஆபத்தில் மாட்டி விட்டதே இப்போது என்ன செய்வது? என்று அந்த காட்டு நாய் யோசித்தது. அப்படி யோசித்ததே தவிர, அதற்காக அந்த காட்டு நாய் பயந்து ஓடவில்லை.


அந்த சிறுத்தையையும், குரங்கையும் பார்க்காத மாதிரி நடித்து அவைகளுக்கு தன் முதுகை காட்டிக்கொண்டு தரையில் அமர்ந்தது. அவை அருகில் நெருங்கியதும் அந்த காட்டு நாய் உரத்த குரலில் சொன்னது.


”அந்த போக்கிரி குரங்கு எங்கேபோய் தொலைந்தது. அதனை நம்பவே முடியாது. நான் இன்னொரு சிறுத்தைப்புலியை சாப்பிடுவதற்கு பிடித்துக்கொண்டுவா என்று சொல்லி அனுப்பி அரை மணிநேரத்துக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் அந்த குரங்கை காணோமே?” என்றது.


காட்டு நாய் சொன்னதை கேட்ட சிறுத்தைப்புலி தன் கோபம் முழுவதையும் குரங்கின் மீது திருப்பியது. அதனை கடித்துக் குதறி கொன்று தின்றுவிட்டது.

இன்றைய செய்திகள்

06.06.2025

இன்றைய செய்திகள் 

⭐ JEE தேர்வில்  மாநிலத்திலேயே முதலிடம் பெற்ற சேலம் மாணவி ராஜேஸ்வரிக்கு , முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து.

⭐ நெகிலி மாசு ஒழிப்பது தான் இந்த ஆண்டின் கருப்பொருள் - சுற்றுச் சூழல் தின  அறிக்கை - தமிழக முதல்வர்.

⭐ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த தமிழக அரசு கொண்டுவந்த கட்டுப்பாடுகள் செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம்.

⭐உலகின் மிக உயரமான ரயில் பாலமாக ஜம்மு காஷ்மீரில் அமைக்கப்பட்டுள்ள செனாப் பாலத்தை  ஜூன் 6ஆம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி. கத்ரா-ஸ்ரீநகர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையையும் தொடங்கி வைக்கவுள்ளார்.

🏀விளையாட்டுச் செய்திகள்

🏀TNPL கிரிக்கெட் இன்று தொடக்கம் .

🏀கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள வந்த சிறு குழந்தை ஒன்றும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 11 தாண்டியது.


Today's Headlines

TODAY'S HEADLINES

✏ Salem student Rajeshwari, who topped the state in the JEE exam, Congratulations from the Chief Minister and political leaders. 

✏ Eradicating Pladtic Pollution is this year's theme - Environment Day Report - Tamil Nadu Chief Minister

✏ The restrictions brought by the Tamil Nadu government to regulate online games will be lifted - Madras High Court. 

✏ Prime Minister Modi will inaugurate  the world's highest railway bridge named Chenab Bridge in Jammu and Kashmir,  on June 6. He will also launch the Vande Bharat train service between Katra and Srinagar too.

 SPORTS NEWS

🏀 TNPL  series cricket starts today.

🏀 RCB's victory celebration in Bengaluru, Karnataka, few people got stuck in the crowd by stampede. The death toll has crossed 11.

TEACHERS NEWS

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459