தமிழகத்தில் உள்ள தெருக்களின் ஜாதிப்பெயரை மாற்றி புதிய பெயர் வைக்க உத்தரவிடபட்டுள்ளது
சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு, அனைத்து மாநகராட்சி, நகராட்சி கமிஷனர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்,
தமிழக அரசு தமிழகத்தில் உள்ள குடியிருப்புகள், சாலைகள், தெருக்கள் ஆகியவற்றில் ஜாதி அடிப்படையிலான பெயர்களை நீக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ‘காலனி’ என்ற வார்த்தையை அதிகாரப்பூர்வ ஆவணம் மற்றும் பயன்பாட்டிலிருந்து நீக்க வேண்டும்.
பெயர்களை மாற்றம் செய்ய, மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில், அந்தந்த பகுதியில் இந்த கருப்பொருளை மையமாக வைத்து, பொதுமக்களின் விருப்பத்தின் அடிப்படையில் ஒப்புதல் பெற்று, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.அதனை, அந்தந்த உள்ளாட்சி மன்றத்தில் வைத்து, மாற்றுப் பெயர் சூட்டி, கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
இதற்கு, அந்தந்த தெருவில் குடியிருக்கும் நபர்களின் பெரும்பான்மை ஒப்புதல் பெறப்பட்டால் போதுமானது. புதிய பெயர்களை சூட்டி, கருத்துருவை, நகராட்சி நிர்வாக இயக்குநர் வாயிலாக அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஜாதி அடிப்படையிலான பெயர்களின் பட்டியலில் ஏதேனும் தெரு மற்றும் சாலையின் பெயர் விடுபட்டிருந்தால், அவற்றையும் கருத்துருவில் சேர்க்க வேண்டும்.எனத் தெரிவிக்க;ப்பட்டுள்ளது
No comments:
Post a Comment