அரசு பள்ளிகளில் 2500 ஆசிரியர்கள் எச்.எம் . , பணியிடம் ஒரே நாளில் காலி - ஆசிரியர் மலர்

Latest

 




 


03/06/2025

அரசு பள்ளிகளில் 2500 ஆசிரியர்கள் எச்.எம் . , பணியிடம் ஒரே நாளில் காலி

IMG-20250603-WA0020

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மே 31ல் 2500 ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் ஒரே நாளில் ஓய்வு பெற்றனர். இதுதொடர்பான முன்னெச்சரிக்கை இல்லாததால் முதல்நாளில் மாணவர்களுக்கு நலத்திட்டம் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது.


கோடை விடுமுறைக்கு பின் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளிகளில் முதல் நாளே புத்தகம், நோட்டு உள்ளிட்ட அனைத்து நலத்திட்டங்களை மாணவர்களுக்கு வழங்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நேற்று அதற்கான பணிகளில் ஆசிரியர்கள், அலுவலர்கள் ஈடுபட்டனர். ஆனால் சில பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.


இதற்கு காரணம், மே 31ல் மாநில அளவில் 2500 ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் பணி ஓய்வு பெற்றது தான். ஏற்கனவே 700க்கும் மேற்பட்ட உயர்நிலை பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்னள. இதையடுத்து மேலும் 350 மேல்நிலை தலைமையாசிரியர் உட்பட இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் என ஒரே நாளில் 2500 பேர் ஓய்வு பெற்றனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459