ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியமானது (RRB), ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து பணியமர்த்தி வருகிறது. அந்த வகையில், தொழில்நுட்பம் அல்லாத பிரபலமான பிரிவுகளில் (NTPC) காலியாக உள்ள 11,558 ( Both Graduate and Under Graduate ) பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியிட்டது.
மேலும், இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், இத்தேர்வுவரும் ஜூன் 5 முதல் ஜூன் 24 தேதி வரை நடைபெறும் என்று ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் அறிவித்துள்ளது. தற்போது இந்த தேர்வின் ஹால் டிக்கெட் வெளியீடு தேதி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது RRB NTPC தேர்வுக்கான ஹால் டிக்கெட் வரும் ஜூன் 1ம் தேதி வெளியிடப்படுகிறது என்றும் இந்த ஹால் டிக்கெட் http://www.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று ரயில்வே பணியாளர் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment