பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு ஓய்வுகால பலன்கள் கிடைக்காது என்று ஓய்வூதிய விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் செய்திருக்கிறது. 2021-ம் ஆண்டின், மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதியம்) விதிமுறைகள், 2003-ம் ஆண்டின் டிசம்பர் 31-ந் தேதி அல்லது அதற்கு முன்பு நியமனம் செய்யப்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த நடைமுறை பொருந்தும் என்றும், அதேநேரம் ரயில்வே ஊழியர்கள், தினக்கூலி தொழிலாளர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். அதிகாரிகளுக்கு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கடந்த ஆண்டு திருத்தப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமலில் இருக்கிறது. இந்த புதிய ஓய்வூதிய திட்டம் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி அமலுக்கு வந்தது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி, மத்திய அரசு ஊழியர் ஒருவர், ஓய்வு பெறுவதற்கு முன் 12 மாதங்களில் எடுக்கப்பட்ட சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெறுவார்.
ஒரு மத்திய அரசு ஊழியர் முழு ஓய்வூதியத் தொகையைப் பெறுவதற்கான தகுதியாக பணி காலம் 25 ஆண்டுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
25 ஆண்டுகளுக்கு குறைவாக அரசுப் பணியில் இருந்து 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஓய்வூதியத் தொகை விகிதாச்சார அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
அதேநேரம் கடந்த ஆண்டு வரை நடைமுறையில் இஐருந்த ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களின் பங்களிப்பு 10 சதவீதமும், மத்திய அரசின் பங்களிப்பு 14 சதவீதமும் இருந்தது. புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் படி, மத்திய அரசின் பங்களிப்பு 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் என்பது சுமார் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.
இந்நிலையில் ஓய்வூதியம் தொடர்பான விதிகளை மத்திய அரசு தற்போது மாற்றி உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு ஓய்வுகால பலன்கள் கிடைக்காது என்று ஓய்வூதிய விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் செய்திருக்கிறது. இந்த ஓய்வூதிய விதிமுறைகளில் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் முக்கிய திருத்தங்களை செய்து அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி, பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு ஓய்வுகால பலன்கள் கிடைக்காது. இந்த விதிகள் 2021-ம் ஆண்டின், மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதியம்) விதிமுறைகள், 2003-ம் ஆண்டின் டிசம்பர் 31-ந் தேதி அல்லது அதற்கு முன்பு நியமனம் செய்யப்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு பொருந்தும்.
ஆனால், ரயில்வே ஊழியர்கள், தற்செயல் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது "பொதுத்துறை நிறுவனங்களில் தவறான நடத்தைக்காக பணிநீக்கமோ அல்லது ஆட்குறைப்போ செய்யப்படும் ஊழியர்கள், தங்களது ஓய்வுகால பலன்களை இழக்க வேண்டி இருக்கும். எனினும் அவர்களது பணிநீக்கம் அல்லது ஆட்குறைப்பு, அவர்களது பொதுத்துறை நிறுவனம் சம்பந்தப்பட்ட அமைச்சகத்தின் மறுஆய்வுக்கு உட்பட்டது என்று அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது
No comments:
Post a Comment