NMMS - ஒரே பள்ளியில் 105 மாணவர்கள் தேர்ச்சி - ஆசிரியர் மலர்

Latest

 




 


18/04/2025

NMMS - ஒரே பள்ளியில் 105 மாணவர்கள் தேர்ச்சி

 Tamil_News_lrg_3907429மத்திய அரசின் என்.எம்.எம்.எஸ்., (தேசிய வருவாய் வழி மற்றும் திறனாய்வு) தேர்வில், மதுரை செயின்ட் மேரீஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகளாக முதலிடம் பிடித்து 'ஹாட்ரிக்' சாதனை படைத்துள்ளனர்.


மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் ஆண்டுதோறும் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுவோருக்கு ஒன்பது முதல் பிளஸ் 2 வரை மாதம் ரூ.1000 கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.


இந்தாண்டு மாநில அளவில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இத்தேர்வைஎழுதினர். இதில் 6,695 பேர் தேர்ச்சி பெற்றனர். மாநில தேர்ச்சியில் 4வது இடம் பெற்ற மதுரையில் 414 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.


இதில் செயின்ட் மேரீஸ் மேல்நிலை பள்ளியில்140 பேர் எழுதியதில், 105 பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தனர். இதில் வசந்த்குமார் 180க்கு 157 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் 2 வது இடம் பெற்றார். சந்தோஷ் குமார் 149 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் 2 வது இடம் வென்றார்.


வெற்றி பெற்ற மாணவர்களை பாதிரியார் ஜெரோம், தாளாளர் குழந்தை ராஜ், தலைமையாசிரியர் ஸ்டீபன் லுார்து பிரகாசம், உதவி தலைமையாசிரியர் மார்டின் ஜார்ஜ் பாராட்டினர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459