School morning Prayer activities - ஆசிரியர் மலர்

Latest

 




 


24/02/2025

School morning Prayer activities

 திருக்குறள் 

பால் : பொருட்பால்

 அதிகாரம்:பெருமை 

குறள் எண் :975. 


பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் 

அருமை உடைய செயல்.


பொருள்:

பெருந்தன்மை உடையவர்,பிறர் ஆற்றுவியலா செயல்களை

முறையாகச் செய்து முடிப்பர்.


பழமொழி :

 வேலைவாய்ப்பு செய்திகள் 2024

அகம்பாவம் அழிவைத் தரும்


Pride goes before a fall.


இரண்டொழுக்க பண்புகள் :   


* வெயில் காலத்தில் செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்ப்பேன்.  


  *மோர், இளநீர், கம்பு, கேழ்வரகு கூழ் போன்ற இயற்கை குளிர்பானங்கள் குடித்து வெப்பத்தின் தாக்கத்தை தணிப்பேன்.


பொன்மொழி :


வேரை வெட்டுகிறவன் அந்த மரத்திற்கு எத்தனை கிளைகள் என்று பார்த்து வெட்ட வேண்டும்.


---திரு. ஹென்றி டேவிட் தேரோ


பொது அறிவு : 


1. நறுமணப் பொருளாக பயன்படக்கூடிய பூ மொட்டு எது? 


விடை: கிராம்பு.      


2. மல்லிகைப்பூவுக்கு பெயர் பெற்ற ஊர் எது? 


விடை: மதுரை


English words & meanings :


 Farm     -   பண்ணை


Flyover    -    மேம்பாலம்



பார்த்து இன்னொரு 


யானை, "அப்படியா, நீ 


பயந்து விட்டாயா?" என்று 


கேட்டது.


அதற்கு   அந்த  யானை 


கீழ்க்கண்டவாறு பதில் 


சொன்னது:


"நான் தவறி இடறி விட்டால்


பன்றி நசுங்கி விடும்.மேலும் 


நான் சுத்தமாக இருக்கிறேன். 


பன்றியின் சேறு என் மேல் 


விழுந்து நானும் 


அசுத்தமாகி விடுவேன்.


இந்தக் காரணங்களால், 


நான் ஒதுங்கிக் 


கொண்டேன்."


நீதி:தன் பலம், பலவீனம் 


தெரிந்தவர்கள் அடக்கத்தில் 


சிறந்தவர்களாக இருப்பார்கள். 


 வேலைவாய்ப்பு செய்திகள் 2024

இன்றைய செய்திகள் - 24.02.2025


* தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு 2,642 மருத்துவர்களை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு சென்னையில் தொடங்கியது.


* தமிழகத்தில் வரும் 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


* உலகின் மிகப் பெரிய அரசாங்க சுகாதார காப்பீட்டு திட்டமாக ஆயுஷ்மான் பாரத் திட்டம் விளங்குகிறது என்றும், இத்திட்டத்தின் அடையாள அட்டையை 75 கோடி பேர் பெற்றுள்ளனர் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.


* இந்திய தேர்தலுக்கு உதவுவதற்காக முந்தைய ஜோ பைடன் நிர்வாகம் 18 மில்லியன் டாலர் வழங்கியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார்.


* உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: மனு பாக்கர் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு.


* புரோ ஹாக்கி லீக்: அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா 4-வது வெற்றி.


Today's Headlines


* The Tamil Nadu government has begun the counseling of  doctors to select 2,642 doctors tobe appointed in Tamilnadu government hospitals.


* The Chennai Meteorological Centre has announced that there is a possibility of rain in one or two places in Tamil Nadu from February 25 to 28.


* The Ayushman Bharat Yojana is the world's largest government-run health insurance program, and 75 crore people have received its identity cards, according to External Affairs Minister S. Jaishankar.


* Former US President Donald Trump has again alleged that the previous president Joe Biden's  administration provided $18 million to aid Indian elections.


* The Indian team, led by Manu Bhaker, has been announced for the World Cup shooting competition.


* In the Pro Hockey League, India defeated Ireland to achieve their fourth victory.


Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459