இரவு பகலாக நடைபெற்று வரும் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


05/12/2024

இரவு பகலாக நடைபெற்று வரும் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

 கோவை மாவட்டம் மதுக்கரை ஒன்றியத்தில் பிச்சனூர் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜெயந்திமாலா என்பவரின் பண பலன்கள் கடந்த ஓராண்டுகளாக வழங்கப்படாமல் உள்ளது. 
















தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் இதுவரை இரண்டு முறை ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும் இதுவரை பணபலன் வழங்கப்படவில்லை.


நேற்று மாலை முதல் வட்டார கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பண பலன்களை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அலுவலகத்தை விட்டு செல்வோம் என்று கூறி அலுவலகத்தில் காத்திருந்தனர். இரவு 9 மணி அளவில் மாவட்ட கல்வி அலுவலர் வந்தார். இரவு ஒரு மணி வரை பேச்சுவார்த்தை நடைபெற்றது.


இதில் உடன்பாடு எட்டப்படாததால் ஆசிரியர்கள் இரவு முழுவதும் அலுவலகத்திலேயே காத்திருந்தனர்.









 இன்றும்  இரண்டாவது நாளாகக் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


வட்டார கல்வி அலுவலர் வேண்டுமென்றே கால தாமதம் செய்து  பண பலன்களை வழங்காமல் இருக்கிறார் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459