அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பானது 2024 ஆகஸ்ட் மாதம் நான்கு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது . புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் விவரங்கள் பள்ளி வாரியாக EMIS இணையத் தளத்தில் 90 % பதிவு செய்யப்பட்டுள்ளது . மீதமுள்ள 10 % பள்ளிகளின் உறுப்பினர்கள் விவரங்கள் பதிவுசெய்யப்பட்டு வருகிறது . உறுப்பினர் பதிவினை முதல் கூட்டதிற்கு முன்னாதாக 100 % நிறைவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது . 2024-2026 ஆண்டுகளுக்கானப் புதிதாகத் தேர்வுசெய்யப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழுவின் முதல் கூட்டமானது 25.10.2024 வெள்ளிக்கிழமை மாலை 03.00 முதல் 04.30 மணி வரை கீழ்காண் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும் . இது முதல் கூட்டம்
என்பதால் புதிதாகத் தேர்வுசெய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் 100 % பங்கேற்பதை தலைமையாசிரியர்கள் உறுதிசெய்ய வேண்டும் .
Proceeding_for_SMC_First_Meeting_25.10.2024_final_18.10.2024.pdf
No comments:
Post a Comment