TNPSC group 2 Exam: எதிர்கொள்வது எப்படி? - ஆசிரியர் மலர்

Latest

 




10/09/2024

TNPSC group 2 Exam: எதிர்கொள்வது எப்படி?

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், சார் பதிவாளர் நிலை II, தனிப்பிரிவு உதவியாளர், வனவர், வருவாய் உதவியாளர், கணக்கர் என 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 தேர்வைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) செப்டம்பர் 14ஆம் தேதி நடத்துகிறது. இந்த தேர்வை 7 லட்சத்து 93 ஆயிரத்து 947 பேர் எழுத உள்ளனர். தேர்விற்கான நாட்கள் நெருங்கி வரும் நிலையில் பலரும் மும்முரமாகத் தயாராகி வருகின்றனர்.

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

எப்படித் தேர்வுக்கு முறையாகப் படித்து தயாராவது முக்கியமோ அதேபோல் தேர்வு எழுதச் செல்லும் போதும், தேர்வறையிலும் சில விஷயங்களைப் பின்பற்றுவது முக்கியமானதாக உள்ளது. தேர்வர்கள் தேர்வு அறையில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை குறித்து சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சுகேஷ் சாமுவேல் கூறுகையில், “அனைவரும் குரூப் 2 தேர்விற்காகத் தயாராகிக் கொண்டிருப்பீர்கள் ஒரு பக்கம் தயாராகிக் கொண்டு இருந்தாலும் மறுபக்கம் உடல் நலத்திற்கும் கவனம் செலுத்த வேண்டும். நன்றாகத் தூங்கி எழுந்து படிக்க வேண்டும். கடைசி நாளிற்கு முன்பாகவே இரண்டு ரிவிஷன் செய்து கொள்ளுங்கள். தேர்வெழுதுவதற்கு முன்பாகவே சரியான தேர்வு நிலையத்தைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் ஒரு ஊரில் இரண்டு மூன்று கார்ப்பரேஷன் பள்ளிகள் இருக்கும் மற்றும் ஒரே பெயரில் இரண்டு பள்ளிகள் அல்லது கல்லூரிகள் இருக்கலாம் . அதனால் தேர்வு நிலையத்தைச் சரியாக முன்பாகவே தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் அது கடைசி நேரத்தில் ஒரு பதற்றத்தை உண்டாக்கும். தேர்வறைக்குள் கொண்டு செல்ல வேண்டியவை ஹால்டிக்கெட், பிளாக் பால் பாயிண்ட் பேனா, ஏதாவது ஒரு அடையாள அட்டை இவை மூன்றும் கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும். மேலும், அனலாக் வாட்ச் எடுத்துச் செல்வது மிக நன்றாகும். ஏனென்றால் நீங்கள் எழுதும் அறையில் கடிகாரம் இல்லாமல் கூட இருக்கலாம். அதனால் கையில் அனலாக் வாட்ச் இருப்பது மிகவும் நல்லதாகும். அதேபோல் பேனாவும் இரண்டு பேனாவாக வைத்துக் கொள்வது நல்லது. பொதுவாகவே தேர்வு எழுதும் போது ஒரு மணி நேரத்திற்கு முன்பாக செல்வது


நல்லது. ஆனால் தற்போது தேர்வாணையமே ஒரு மணி நேரத்திற்கு முன்பே வரும்படி குறிப்பிட்டு இருக்கிறார்கள். 9 மணிக்கு முன்னதாகவே தேர்வரைக்கும் சென்று விட வேண்டும். அதனால் முடிந்த அளவிற்குச் சீக்கிரமாகவே தேர்வு நிலையத்திற்குச் சென்று விடுங்கள்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459