சமுதாய அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! - ஆசிரியர் மலர்

Latest

 




29/09/2024

சமுதாய அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

 தேனி மாவட்டம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை பிரிவில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 3 சமுதாய அமைப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: சமுதாய அமைப்பாளர்


காலியிடங்கள்: 3 (தேனி நகராட்சி - 1, ஆண்டிபட்டி மற்றும் வடுகபட்டி பேரூராட்சி - 1, போ.மீனாட்சிபுரம் மற்றும் மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி - 1)


தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம், கணினியில் பணிபுரிவதற்கான திறன் மற்றும் நல்ல தொடர்புகொள்ளும் திறன் பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்: பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு தொகுப்பூதியமாக நகராட்சிக்கு ரூ.15,000, பேரூராட்சிக்கு மாதம் ரூ.14,000 வழங்கப்படும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:


மேலாளர், நகர்ப்புற வாழஅவாதார மையம், எண்.4, பூமாலை வணிக வளாகம், தாலுகா அலுவலகம் எதிர்புறம், தேனி.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 4.10.2024


இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு தேனி நகர்ப்புற வாழ்வாதார மையத்தில் வேலைநாள்களில் மட்டும் மாலை 5.30 மணிக்குள் சென்று தெரிந்துகொள்ளவும்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459