களஞ்சியம் Appல் விழா முன்பணம் : என்னென்ன விழாவிற்கு - எப்போது - எப்படி விண்ணப்பிப்பது?* - ஆசிரியர் மலர்

Latest

 




29/09/2024

களஞ்சியம் Appல் விழா முன்பணம் : என்னென்ன விழாவிற்கு - எப்போது - எப்படி விண்ணப்பிப்பது?*


 Festival advance video: Click here 

IMG_20240928_112102

களஞ்சியம் Appல் விழா முன்பணம் : என்னென்ன விழாவிற்கு - எப்போது - எப்படி விண்ணப்பிப்பது?


✍🏼செல்வ.ரஞ்சித் குமார்


ஒருங்கிணைந்த நிதி மற்று மனித வள மேலாண்மைத் திட்டத்தின் (IFHRMS) செயலியான Kalanjiyam Appன் வழியே விழா முன் பணத்திற்கு விண்ணப்பிக்கும் நடைமுறை அக்டோபர் 2024 முதல் நடைமுறைக்கு வருகிறது. இனி தமிழ்நாட்டு அரசின் ஊதியம் பெறுவோர் இந்த App வழியே தங்களுக்கான விழா முன்பணத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.


👉🏼 என்னென்ன விழாக்களுக்கு முன்பணம் பெறலாம்?


1. பக்ரித்

2. கிறிஸ்துமஸ்

3. தீபாவளி

4. ஈஸ்டர்

5. காந்தி ஜெயந்தி

6. புனித வெள்ளி

7. விடுதலை நாள்

8. கிருஷ்ண ஜெயந்தி

9. மே தினம்

10. மிலாடி நபி

11. மொகரம்

12. ஓணம்

13. பொங்கல்

14. ரம்ஜான்

15. குடியரசு தினம்

16. தெலுங்கு வருடப் பிறப்பு

17. விஜயதசமி

18. விநாயகர் சதுர்த்தி


(பட்டியலில் முதலாவதாக ஆயுதபூஜை தான் வரும். எனினும் அதற்கு விழா தேதி automatic enable option வரவில்லை. எனவே தற்போதைய நிலையில் அதற்கு விண்ணப்பிக்க இயலாது.)



👉🏼 எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?


விழா நாளுக்குச் சரியாக 30 நாள்களுக்கு முன்னர் முதல் விண்ணப்பிக்கலாம். உதாரணமாக தீபாவளி 31.10.2024ம் தேதி எனில் 02.10.2024 முதல் விண்ணப்பிக்கலாம்.


மேலும், இறுதியாகப் பெற்ற விழா முன்பணத்தை முழுமையாகத் திருப்பி செலுத்திய பின்பே விண்ணப்பிக்க வேண்டும்.



👉🏼 எந்தத் தேதிவரை விண்ணப்பிக்கலாம்?


IFHRMSல் centralized payroll run செய்வதற்கு முன்பே பணம் வரவாகும்படி முன்தேதியிட்டு விண்ணப்பிப்பது நல்லது.


உதாரணமாக, மாதந்தோறும் 15 தேதிக்கு மேல் centralized payroll run செய்யப்படுமெனில், 14ஆம் தேதி பணம் வரவாகிவிட வேண்டும். Bill தயார் செய்து கருவூலத்தில் ஒப்படைக்க அலுவலகத்திற்கும் போதிய காலம் தேவை என்பதால், 8 - 10ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துவிடுவது நல்லது.


👉🏼 எத்தனை முறை விண்ணப்பிக்கலாம்?


IFHRMS மூலம் ஒரு நாள்காட்டி ஆண்டில் (January - December) ஒரு முறை மட்டுமே விழா முன்பணம்  அனுமதிக்கப்படும். பணம் வரவாகும் மாதத்தைத்தான் IFHRMS கணக்கில் எடுத்துக் கொள்ளும்.


உதாரணமாக, 2024 கிறிஸ்துமஸ்ஸிற்கு நீங்கள் விண்ணப்பித்தும் அலுவலக தாமதத்தால் 2025 ஜனவரி 1-ஆம் தேதி உங்களது கணக்கில் பணம் வரவானால் 2025 கிறிஸ்துமஸ்ஸிற்கு மீண்டும் விண்ணப்பித்தால் IFHRMS தானாகவே தங்களின் விண்ணப்பத்தை நிராகரித்து விடும். ஓராண்டில் ஒரு முறை மட்டுமே வாய்ப்பு.


👉🏼 எப்போது பிடித்தம் ஆரம்பமாகும் ?


பணம் வரவான அந்த மாத ஊதியத்திலேயே தவணை தொடங்கப்பட்டு ரூ.1000/- பிடித்தம் செய்யப்பட்டுவிடும். தொடர்ச்சியாக 10 மாதங்கள் தவணை பிடித்தம் செய்யப்படும்.


 எப்படி விண்ணப்பிப்பது?


Kalanjiyam Appல் Login செய்யவும்.


பின் Advance - Festival Advance - Apply என்ற வரிசையில் தேர்வு செய்யவும்.


அதன்பின், Festival Name என்பதில் தாங்கள் விண்ணப்பிக்கும் விழாவைத் தேர்வு செய்தால், Festival Date - Advance Amount - Recovery no. of Installment உள்ளிட்டவை தானாகவே தோன்றும்.


இறுதியாக, Submit செய்ய வேண்டும்.


👉🏼விண்ணப்பித்த அனைவருக்கும் முன்பணம் கிடைத்துவிடுமா?


ஒவ்வொரு நிதியாண்டிற்கும் முன்னதாக அவ்வாண்டிற்கான நிதிநிலை அறிக்கை (Budget) துறை வாரியான தலைமையிடத்தில் இருந்து ஒவ்வொரு அலுவலகத்திற்கும் கோரப்படும். விழா முன்பணத்தைப் பொறுத்தவரை அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிதி கோரி விண்ணப்பிக்கப்படும். கோரப்பட்ட நிதி பெரும்பாலும் கிடைத்துவிடும் என்பதால் விண்ணப்பித்த அனைவருக்கும் முன்பணம் கிடைக்க வாய்ப்புண்டு.


ஒருவேளை ஆண்டுத் தொடக்கத்தில் காலிப்பணியிடங்கள் அதிகமிருந்து அதன்பின் நிரம்பியிருப்பின் பெறப்பட்ட நிதி விண்ணப்பிப்போரின் எண்ணிக்கைக்குப் போதுமானதாக இல்லாது போகலாம். அத்தகைய நிலையில் இருக்கும் நிதியில் விண்ணப்பித்த வரிசைப்படி முன்னுரிமை அளிக்கப்படக்கூடும்.


பின் குறிப்பு :

தற்போது Appல் விண்ணப்பித்தாலே போதுமா என்பதை 02.10.2024ற்குப் பின்னர் தங்களது அலுவலகத்தைக் கேட்டு உறுதி செய்து கொள்ளுங்கள்.  ஏனெனில் இதுதான் முதல்முறை என்பதால் அந்தத் தேதிக்குப் பின்புதான் அலுவலகங்களுக்கே முறையான & தெளிவான வழிகாட்டல் கிடைக்கப்படக்கூடும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459