அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள்: 95,600 சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்கள் பங்கேற்பு - ஆசிரியர் மலர்

Latest

 




15/09/2024

அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள்: 95,600 சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்கள் பங்கேற்பு

 அரசுப் பள்ளிகளில் நடைபெறும் கலைத் திருவிழா போட்டிகளில் 95,600 சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்கள் கலந்து கொண்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தச் செய்யும் வகையில் கலைத் திருவிழா போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. அதன்படி மாறுவேடம், பலகுரல் பேச்சு, பாடல், நடனம், ஓவியம், கதைக் கூறுதல் உட்பட பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகின்றனர் . தற்போது பள்ளி அளவிலான போட்டிகள் முடிந்த நிலையில் அடுத்தகட்டமாக வட்டார அளவிலான போட்டிகள் நடைபெறுகின்றன.


இந்நிலையில் கலைத் திருவிழா போட்டிகள் சார்ந்த கூடுதல் தகவல்களை பள்ளிக்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: “நடப்பு கல்வியாண்டில் (2024-25) கலைத் திருவிழா போட்டிகளில் அனைத்து மாணவர்களும் பங்கேற்கும் விதமாக வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.அந்தவகையில் இந்தாண்டு கலைத் திருவிழாவில் 95,600 சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி அங்கீகரிக்கப்பட உள்ளன.


முந்தைய ஆண்டுகளில் கலை திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற 5 சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கு பரிசுகள் அளித்து கவுரவித்தது குறிப்பிடத்தக்கது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459