பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் வழங்க கோரி அக்.24-ல் உண்ணாவிரதம்: CPS ஒழிப்பு இயக்கம் முடிவு - ஆசிரியர் மலர்

Latest

 




23/09/2024

பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் வழங்க கோரி அக்.24-ல் உண்ணாவிரதம்: CPS ஒழிப்பு இயக்கம் முடிவு

 சிபிஸ் ஒழிப்பு இயக்க மாநில அள விலான ஆலோசனைக் கூட்டம், திருச்சியில் நேற்று நடைபெற்றது.


ஒருங்கிணைப்பாளர் கே.பி. முத்துராமலிங்கம் தலைமை வகித் தார்.

TEACHERS NEWS
ஒருங்கிணைப்பாளர் என்.சந் திரசேகர், இணை ஒருங்கிணைப் பாளர் ஞா.ச.இன்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மாநில தலைமை ஒருங்கி ணைப்பாளர்கள் பி.பிரெட்ரிக் ஏங் கெல்ஸ். எஸ்.ஜெயராஜராஜேஸ் வரன், மு.செல்வகுமார். ஆலோச கர்கள் எம்.சுப்பிரமணியன், .இ.கண்ணன் ஆகியோர் பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.தமிழ்ச் செல்வி, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலச் செயலாளர் பி.சந் திரசேகர், தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாதில துணைத் தலைவர் ரெ.வரதராஜன், தமிழ்நாடு கிராமநிர்வாக அலுவலர் சங்க மாநிலத் தலைவர் தி.ராஜன்

சேதுபதி உட்பட 26 சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், "சட்டப்பேர வைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், புதிய ஓய்வூதியத் திட் டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிமுக அரசு மீண்டும் அமல்படுத்த வேண்டும். பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அக்.24ம் தேதிஆட்சியர் அலுவலகங்கள் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டும்.


அக்டோபர். நவம்பர் மாதங்க ளில் மாவட்டங்களில் கோரிக்கை மாநாடு நடத்த வேண்டும். டிசம்பர் மாதம் கன்னியாகுமரி முதல் சென்னை வரை அரசு ஊழி யர்கள், ஆசிரியர்களைச் சந்திக்கும் இயக்கம் நடத்த வேண்டும்" என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன


.



No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459