டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் இன்று (08.09.2024) தீர்மானிக்கப்பட்ட முடிவுகள் : - ஆசிரியர் மலர்

Latest

 




08/09/2024

டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் இன்று (08.09.2024) தீர்மானிக்கப்பட்ட முடிவுகள் :

 10.09.2024 ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என இன்று(08.09.2024) நடைபெற்ற டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழுக் கூட்டத்தில்  முடிவு.

IMG-20240908-WA0026

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜாக் பேரமைப்பின் மாநில உயர்மட்டக்குழுக் கூட்டம் 08.09.2024 அன்று காணொளி வழியே நடைபெற்றது. கூட்டத்திற்கு டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினரும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ( பொறுப்பு ) திரு.ஈ.ராஜேந்திரன் அவர்கள் தலைமை வகித்தார் . கூட்டத்தில் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கே.பி.ரக்ஷக்ஷித் , ஆவின்சென்ட் பால்ராஜ் , ச.மயில் , இரா.தாஸ் , சி.சேகர் , இல.தியோடர் ராபின்சன் , மன்றம் நா.சண்முகநாதன் , வி.எஸ்.முத்துராமசாமி , கோ.காமராஜ் . சி.ஜெகநாதன் , டி.ஆர்.ஜான் வெஸ்லி ஆகியோர் பங்கேற்றனர் . இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது . தீர்மானம் : 1 தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜாக் பேரமைப்பு 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தவுள்ள 10.09.2024 ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் 29.09.2024,30.09.2024 , 01.10.2024 ஆகிய மூன்று நாட்கள் தொடர் கோட்டை முற்றுகைப் போராட்டம் ஆகிய போராட்ட அறிவிப்புகளைத் தொடர்ந்து டிட்டோஜாக் பேரமைப்பை 08.09.2024 அன்று மதிப்புமிகு . பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் அவர்களும் மதிப்புமிகு . தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களும் அழைத்து கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர் . பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்ற நிலையில் அது தொடர்பாக தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு எண் : 1387 , நாள் : 07.09.2024 வெளியிடப்பட்டுள்ளது . அந்த செய்திக்குறிப்பை முழுமையாக ஆய்வு செய்த டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு , டிட்டோஜாக்கின் 31 அம்சக் கோரிக்கைகளில் பெரும்பாலான முக்கியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக சாதகமான எவ்வித அறிவிப்புகளும் 4 பக்க செய்திக்குறிப்பில் இடம் பெறாததால் திட்டமிட்டவாறு 10.09.2024 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தையும் , 28.09.2024 , 30.09.2024 மற்றும் 01.10.2024 ஆகிய மூன்று நாட்கள் கோட்டை முற்றுகைப் போராட்டத்தையும் திட்டமிட்டபடி வலிமையுடன் நடத்துவதென ஏகமனதாகத் தீர்மானிக்கிறது .


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459