SCHOOL MORNING PRAYER ACTIVITIES 29.08.2024 - ஆசிரியர் மலர்

Latest

 




28/08/2024

SCHOOL MORNING PRAYER ACTIVITIES 29.08.2024


 திருக்குறள்: 


பால்: பொருட்பால்

அதிகாரம்: இடுக்கண் அழியாமை

குறள் எண்:622

வெள்ளத்து அனைய இடும்பை அறிவு உடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.

பொருள்: வெள்ளம் போல் அளவற்றதாய் வரும் துன்பமும் அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத்துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும்.

பழமொழி :

A good reputation is a fair estate. 

 நற்குணமே சிறந்த சொத்து.

இரண்டொழுக்க பண்புகள் :  

*கல்வி அறிவோடு கலைத்திறனும் மேம்பட எம் பள்ளியில் நடைபெறும் கலைத்திருவிழா போட்டிகளில்

TEACHERS NEWS
கலந்து கொண்டு வெற்றி பெறுவேன். 

 * எனது பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும் ,பெற்றோர்களுக்கும் பெருமை தேடித் தரும் வகையில் நல்ல மாணவனாக நடந்து கொள்வேன்.

பொன்மொழி :

இது ஒரு கடினமான பணியின் தொடக்கத்தில் உள்ள நமது அணுகுமுறை, எல்லாவற்றையும் விட, அதன் வெற்றிகரமான முடிவை பாதிக்கும்." - வில்லியம் ஜேம்ஸ்

பொது அறிவு : 

1. நுண்ணோக்கியை முதன் முதலில் பயன்படுத்தியவர் _________ 

விடை : லியூவன் ஹுக்.  

2. மரபுப் பண்புகளைக் கடத்துதலில் முக்கியப் பங்கு வகிப்பது______ 

விடை : DNA 

English words & meanings :

 mantis - an insect looks like as it is praying, noun. மான்டிஸ். பெயர்ச் சொல்

வேளாண்மையும் வாழ்வும் : 

மழைப்பொழிவின் பழைய கணக்கு முறை “செவி” அல்லது “பதினு” எனப்படும். இது 10 மி.மீ அல்லது 1 செ.மீட்டருக்கு சமமானது. மழையின் அளவுக்கும் நிலத்தின் ஈரப்பதத்துக்கும் தொடர்பு உண்டு. இதனை ‘பதினை’ என்றனர்.

ஆகஸ்ட் 29

தியான் சந்த் அவர்களின் பிறந்தநாள்

தியான் சந்த் (Dhyan Chandஇந்திध्यान चंद); பிறப்பு: அலகாபாத்தில் ஆகத்து 291905 – இறப்பு:திசம்பர் 31979), என்பவர் இந்திய வளைதடிப் பந்தாட்ட வீரர் ஆவார். வளைதடிப்பந்தாட்ட வரலாற்றில் சிறந்த விளையாட்டு வீரராகக் கருதப்படுகிறார் [1] 1928 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டமிலும் 1932 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலசிலும் [2] 1936ஆம் ஆண்டு பெர்லினிலும் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களில் [3] தங்கப் பதக்கம் பெற்ற இந்திய அணியில் பங்கேற்றிருந்தார். [4] 1928 முதல் 1964 வரையிலான காலங்களில் நடந்த எட்டு ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இவர் இடம்பெற்றிருந்த ஆடவர் வளைதடிப் பந்தாட்டத்தில் ஏழு போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

நீதிக்கதை

 மணியோசையும் மக்கள் அச்சமும் 

ஒரு கிராமத்தின் எல்லையில் ஒரு காடு இருந்தது. கிராமத்திலிருந்த ஒரு கோவிலில் உள்ள கதவில் ஒரு வெள்ளி மணி கட்டப்பட்டிருந்தது. ஒரு நாள் ஒரு திருடன் மணியைத் திருடிக் கொண்டு காட்டிற்குள் ஓடி விட்டான். 


கோவிலுக்கு சொந்தமான வெள்ளி மணி காணாமல் போனதில் கிராம மக்கள் மிகவும் வருத்தம் அடைந்தனர். அன்று இரவு அந்த மணி அடிக்கும் சத்தம் கேட்டது. பல பக்கங்களிலிருந்தும் மணி ஓசை கேட்பது

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

போல் அவர்களுக்கு தோன்றியது. இதைக் கேட்டு அம்மக்கள் பயந்துவிட்டனர். கோவில் மணியை திரும்பப் பெறுவதற்கு கிராம மக்கள் எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை என்று கோவிலில் இருந்த தெய்வம் கோபித்துக் கொள்வதாக அந்த மக்கள் எண்ணி பயந்து போனார்கள்.


 மறுநாள் கிராம மக்கள் சிலர் மணியைத் தேடி காற்றுக்குள் சென்றனர். ஆனால் மணி எங்கிருக்கிறது என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை; ஊருக்கு திரும்பினர்.


அந்த இரவும் அவர்களுக்கு மணியோசை கேட்டது. ஒருமுறை ஒரு திசையில் இருந்தும் அடுத்த முறை வேறு திசையில் இருந்தும் மணியோசை கேட்பது போல் அவர்களுக்கு தோன்றியது.  உண்மையிலேயே அந்த மக்கள் மிகவும் நடுங்கிப் போனார்கள்


மறுநாள், அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுவன், உண்மையில் என்னதான் நடக்கிறது என்பதை கண்டறிய காட்டிற்குப் புறப்பட்டான். தனியாக காட்டுக்குள் சென்றான். சிறிது நேரத்திற்கு பிறகு முரசு அடிக்கும் சத்தமும் மணியோசையும் கேட்டது. அவன் தைரியமாக சத்தம் வந்த திசையை நோக்கி சென்றான். அங்கு ஒரு குரங்கு கூட்டம் ஒரு முரசு , ஒரு மணி, சில உடுப்புகள் இவற்றை வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருப்பதை கண்டான்.


குரங்குதான் மணியை அடித்து ஓசையை எழுப்பி இருக்கிறது; மரத்திற்கு மரம் தாவுவதால் மணியோசை வெவ்வேறு திசைகளில் இருந்து கேட்கிறது என்பதையும் சிறுவன் உணர்ந்து கொண்டான். அவன் அங்கேயே பொறுமையாக காத்துக் கொண்டிருந்தான். ஒரு குரங்கு மணியை வைத்து  விளையாடியவாரே அந்தக் கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்தது ஒரு மரத்தில் உட்கார்ந்தது.


இதற்காக காத்திருந்த சிறுவன், குரங்கின் எதிரே சில பழங்களையும் கொட்டைகளையும் வீசி எறிந்தான்.


சிறிது நேரத்திற்குப் பிறகு குரங்கு பழங்களையும் கொட்டைகளையும் பார்த்தது. அவற்றை எடுப்பதற்காக மரத்திலிருந்து இறங்கியது.  சிறுவன் விரைந்து சென்று மணியை எடுத்துக் கொண்டான். கிராமத்திற்கு ஓடிவந்தான்.  காட்டில் உண்மையில் என்ன நடந்தது என்பதை கிராம மக்களிடம் விவரமாக எடுத்துக் கூறினான். சூழலை உணர்ந்து சிந்தித்து செயல்பட்ட சிறுவனை அனைவரும் பாராட்டினார்கள்

நீதி:  எதையும் தீர விசாரித்து உண்மையை அறிந்து கொள்வதே நன்று.

இன்றைய செய்திகள்

29.08.2024

* காளான் வளர்த்தல் மற்றும் பயிரிடுதலை வேளாண் செயல்பாடுகளின் கீழ் சேர்த்து தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

* பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழகம் இணையாததால் பள்ளி வளர்ச்சிப் பணிகளுக்கான நிதியுதவியை மத்திய அரசு  நிறுத்தியுள்ளது. எனவே மானியத்தை விடுவிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்.

* மத்திய அரசு தடை செய்த 156 மருந்துகளை தமிழகத்தில் விற்றால் நடவடிக்கை: மாநில மருந்துக் கட்டுப்பாட்டு இயக்ககம் எச்சரிக்கை.

* பொதுமக்கள் குறைகளை 21 நாட்களுக்குள் தீர்க்க வேண்டும்: புகார் மனுக்கள் குறித்து புதிய விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு.
* கொழும்பு துறைமுகத்தில் ஒரே நேரத்தில் இந்திய, சீன போர் கப்பல்கள் முகாம்: இலங்கை கடற்படையுடன் தனித்தனியாக கூட்டுப் பயிற்சி.

* மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி பாரீஸில் நேற்று தொடங்கியது.

* அமெரிக்க ஓபன் டென்னிஸ்; ஸ்பெயின் வீரர் அல்காரஸ் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.

* 3-வது டி20 போட்டி; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ்.

Today's Headlines

* The Tamil Nadu government has issued a notification including mushroom growing and cultivation under agricultural activities.
 * As Tamil Nadu did not join the PM Sri scheme, the central government has stopped funding for school development works.  Hence CM Stalin's letter to PM Modi requesting release of subsidy.

 * State Drug Control Department warns of action if  they sell the 156 banned drugs by the central government.

 * Public grievances to be resolved within 21 days: Central government issues new rules on grievance petitions.

*  Indian, Chinese warships focked at Colombo port for Separate joint exercise with Sri Lanka Navy.

 * The Paralympic


Games for the differently- abled started in Paris yesterday

 * US Open Tennis;  Spanish player Algarez advances to the next round.

* West Indies beat South Africa and won the series completely in 3rd T20.

 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459