நாடாளுமன்றத்தில் லோக்சபாவில் புதன்கிழமை அன்று ஓய்வூதியம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், மத்திய அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு மாறுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.
அரசு ஊழியர்களுக்குப் நாடு முழுவதும் பழைய ஓய்வூதியத் திட்டம் 2003-ம் ஆண்டு வரை அமலில் இருந்தது. பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் பணிஓய்வு பெற்ற பிறகு, அவர்கள் கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் 50% தொகை ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால் 2004-ம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, என்.பி.எஸ் (NPS) எனப்படும் தேசிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
பங்களிப்புத் திட்டமான இதன்படி, அரசு ஊழியர், அரசு என இரு தரப்பில் இருந்தும் ஓய்வூதிய நிதிக்குப் பங்களிப்பு செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் எந்தவோர் உத்தரவாதமும் இல்லை.. அத்துடன் பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களின் பாதிப்பும் என்.பி.எஸ் நிதியில் இருக்கிறது என்பது கருத்தாக உள்ளது.
நீண்ட கால அடிப்படையில் தேசிய ஓய்வூதியத் திட்டம் அரசு ஊழியர்களுக்கு நல்ல வருமானம் கொடுக்கிறது என்றாலும் ஆனாலும், இந்தத் திட்டத்தில் ஓய்வூதியத்துக்கு உத்தரவாதம் இல்லை எனபதால் அரசு ஊழியர்கள் கலக்கத்திலேயே இருக்கிறார்கள். இதன் காரணமாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால் மத்திய அரசு இந்த திட்டத்தினை அமல்படுத்த அரசு தயாராக இல்லை. அதேநேரம் அரசு ஊழியர்களுக்கு 40% முதல் 45% வரை ஓய்வூதியத்துக்கு உத்தரவாதம் அளிக்கலாம் என நிதி அமைச்சகத்துக்கு பரிந்துரை ஒன்று செய்யப்பட்டிருக்கிறது. இதுபற்றி அரசு இன்னும் அறிவிக்கவில்லை.. இதுபற்றி அறிவிப்பு எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதனிடையே மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், "மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2003-ம் ஆண்டு தேசிய ஓய்வூதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. பாதுகாப்பு படையினரை தவிர அனைத்து துறைக்கும் 2004 ஜனவரி 1-ம் தேதி முதல் இது அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் 2003 டிசம்பர் 22-ம் தேதிக்கு முன் அறிவிக்கப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட பணியாளர்கள் பழைய ஓய்வூதியத்துக்கு திரும்ப கோர்ட்டு உத்தரவின் படி கடந்த ஆண்டு மார்ச் 3-ம் தேதி ஒருமுறை விருப்ப தேர்வை அரசு வழங்கியது. இதற்காக பணியாளர்கள் விருப்பத்தை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு கடந்த ஆகஸ்டு 31-ம் தேதியாகவும், இதை பரிசீலிப்பதற்கான காலக்கெடு 2023 நவம்பர் 30-ம் தேதியாகவும் இருந்தது. ஆனால் இந்த காலக்கெடுவை நீட்டிப்பதற்கான எந்த திட்டமும் அரசிடம் இல்லை என்றும் தெரிவித்தார்
No comments:
Post a Comment