அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் மலர்

Latest

03/07/2024

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்


1273746

கல்லூரிக் கல்வி இயக்குநர் செ.கார்மேகம், அனைத்து மண்டலங்களின் இணை இயக்குநர்களுக்கும் அனுப்பிய சுற்றிக்கையில் கூறியிருப்பதாவது:


அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2 சுற்று கலந்தாய்வு முடிவில் 63 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன. எஞ்சியுள்ள இடங்களை நிரப்பும் வகையில் மாணவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன்படி தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை இணையதளம் (https://www.tngasa.in/) இன்று மீண்டும் திறக்கப்பட உள்ளது.


இதையடுத்து கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் மேற்கண்ட இணையதளத்துக்கு சென்று ஜூலை 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459