அரசு ஊழியர்களை சார்ந்து வாழும் தாய் , தந்தையரும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்கப்படுவர் : முதலமைச்சர் - ஆசிரியர் மலர்

Latest

29/06/2024

அரசு ஊழியர்களை சார்ந்து வாழும் தாய் , தந்தையரும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்கப்படுவர் : முதலமைச்சர்


 dinamani%2F2024-06%2Fafa6908e-4dc3-4622-a9bc-974a16c2c7da%2Ftncm1a

தமிழ்நாடு சட்டப் பேரவையில், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர்...

அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் அரசு ஊழியர்களைச் சார்ந்துள்ள தாய், தந்தையரையும் பயனாளிகளாக சேர்த்திட வேண்டுமென்று காவல் துறையினர் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்களிடம் இருந்தும் கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. அவற்றை உரிய முறையில் ஆராய்ந்து, அரசு அலுவலர்களைச் சார்ந்து வாழும் அவர்களது பெற்றோருக்கும் மருத்துவக் காப்பீட்டின் பலன் சென்றடையும் வகையில் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களின் விருப்பத்தைப் பெற்று, தற்போது நடைமுறையில் உள்ள புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மறுசீரமைக்கப்படும்.


மேலும், புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பயன்களைப் பெறும் அரசு அலுவலர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களை களைந்திட தலைமைச் செயலாளர் தலைமையில் விரைவில் ஆய்வுக் கூட்டம் நடத்திடவும், தேவைப்படும் நெறிமுறைகளை வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் கூறினார்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459