மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு இல்லம் தேடி கல்வி திட்ட சிறப்பு அலுவலரின் சுற்றறிக்கை - ஆசிரியர் மலர்

Latest

24/06/2024

மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு இல்லம் தேடி கல்வி திட்ட சிறப்பு அலுவலரின் சுற்றறிக்கை

 மாவட்ட கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு ,

   இல்லம் தேடி கல்வி திட்ட சிறப்பு அலுவலர் அவர்கள் திட்டத்தினுடைய பணிகள் முடித்து, வட்டார அளவில் பணியாற்றிய ஒருங்கிணைப்பாளர்களை மீண்டும் ஜுலை ஒன்றாம் தேதி முதல் பள்ளிக்கு திரும்ப அனுப்பி உள்ளார்கள். அவ்வாறு அனுப்பியுள்ள ஆசிரியர்களில் சில இடங்கள் உபரி பணியிடமாக உள்ளது என தெரிவித்துள்ளார்கள். அந்த ஆசிரியர்களை தற்போது நடைபெற உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளினுடைய உபரி ஆசிரியர்களாக இருப்பின் வருகின்ற 27 28 ஆம் தேதிகளில் அரசு பள்ளிகளுக்கு மாற்றுப் பணியில் நியமனம் செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் அரசு பள்ளி ஆசிரியர்களாக இருப்பின் அந்தப் பள்ளியில் உபரி பணியிடம் இல்லாமல் இருந்தால் அவர்களை தொடர்ந்து பணிபுரியவும் உபரி பணியிடமாக இருந்தால் உடனடியாக மாணவர்களின் தேவை அடிப்படையில் ஒன்றியத்திற்குள் உள்ள அரசு பள்ளிக்கு உடனடியாக நியமனம் செய்கின்ற வகையில் அவர்களுக்கு உரிய கலந்தாய்வு நடத்தி பணி மாறுதல் ஆணை வழங்கப்பட  வேண்டும்.


   இல்லம் தேடிக் கல்வி திட்ட சிறப்பு அலுவலர் அவர்கள் வழங்குகின்ற பட்டியல் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் அதனை சரி பார்த்து உறுதி செய்து இப்பணிகளை எவ்வித சுணக்கும் இன்றி நன்முறையில் நடத்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459