இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவு வெளியீடு: 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்று சாதனை - ஆசிரியர் மலர்

Latest

05/06/2024

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவு வெளியீடு: 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்று சாதனை

 


 1260085

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் 13.16 லட்சம் பேர்தேர்ச்சி பெற்றுள்ளனர். தேசிய அளவில் தமிழகத்தில் 8 பேர் உட்பட67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்ணுடன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.


நம்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும்நுழைவுத்தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப் படுகிறது.


அதேபோல், ராணுவ நர்சிங்கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங்படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக் கப்பட்டுள்ளது. இத்தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்திவருகிறது.


அதன்படி நடப்பாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 571 நகரங்களில் கடந்த மே 5-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 23 லட்சத்து33,297 பேர் எழுதினர். தமிழகத்தில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்றனர். இந்த தேர்வுக்கான விடைக்குறிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.


தேர்ச்சி விகிதம் உயர்வு: இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் நேற்றிரவு வெளியாகின. நாடு முழுவதும் மொத்தம் 13 லட்சத்து 16,268 (56.41%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தஆண்டை விட 0.2% சதவீதம் அதிகமாகும். தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தாண்டு ஒரு லட்சத்து52,920 பேர் தேர்வு எழுதியதில் 89,426 (58.47%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது தேர்வுஎழுதியவர்கள் மற்றும் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 2023-ல் 1,44,514பேர் தேர்வு எழுதியதில் 78,693 (54.45%) பேர் தேர்ச்சிபெற்றனர்.


தமிழக மாணவர்கள் முதலிடம்: நீட் தேர்வு மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது. இதில் 67 மாணவர்கள் முழு மதிப்பெண்ணுடன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459