SSLC தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி: துணை தேர்வுக்கு தயார்படுத்த நடவடிக்கை - ஆசிரியர் மலர்

Latest

04/05/2024

SSLC தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி: துணை தேர்வுக்கு தயார்படுத்த நடவடிக்கை

 1241370

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் எம்.ஆர்த்தி,பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி ஆகியோர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கூட்டாக அனுப்பியுள்ள சுற்றிக்கை: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், 6 முதல் 18 வயதுடைய, பள்ளி செல்லாத, இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைப்பதற்கான செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், `தொடர்ந்து கற்போம்’ என்ற திட்டத்தின் வாயிலாக 45 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.


நடப்பு கல்வி ஆண்டில் 10-ம்வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வெழுதாத மாணவர்களுக்கு உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு சிறப்பு பயிற்சிகள் வழங்க திட்டமிட்டப்பட்டுள்ளது.


மேலும், அவர்களுக்கு வாராந்திர தேர்வுகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்புபயிற்சி, தேர்வு முடிவு வெளியாகும்நாள் முதல் துணைத் தேர்வு நடைபெறும் நாள் வரை நடைபெறும். இதன்மூலம், மாணவர்கள் தங்கள் கல்வியை தொடர முடியும்.


பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் வீடுகளுக்கு சென்றுசிறப்பு பயிற்சி மையத்துக்கு அழைத்து வர பள்ளி மேலாண்மைகுழ உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு வகுப்புக்குமாணவர்கள் வருவதை பள்ளி தலைமையாசிரியர்கள் கண்காணிக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459