அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை சேவை மையம் - ஆசிரியர் மலர்

Latest

13/05/2024

அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை சேவை மையம்

 


 kalvi_L_240513094750000000

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 2024- 25ம் ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைகான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


விண்ணப்பிக்க விரும்புவோர், www.tngasa.in என்ற இணையதள முகவரியில், கடந்த 6ம் தேதி முதல் பதிவு துவக்கப்பட்டுள்ளது.


தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்களுக்காக, செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லுாரியில், மாணவர் சேர்க்கை உதவி மையத்தை, கல்லுாரி முதல்வர் கிள்ளிவளவன் துவக்கி வைத்தார்.


செங்கல்பட்டு மாவட்டத்தை சுற்றியுள்ள கிராமப்புற மாணவர்கள், கல்லுாரிக்கு சென்று, விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து, சேவை மையத்தில் உள்ள பேராசியர்களிடம் தெரிந்து கொண்டனர்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459