தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? - ஆசிரியர் மலர்

Latest

20/04/2024

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?

 1003

தமிழகத்தில் பல்வேறு வகுப்புகளுக்கு கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் மீண்டும் இவர்களுக்கான பள்ளிகள் திறப்பு எப்போது என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. 


இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தமிழக அரசு இன்னும் வெளிவிடாத நிலையில் சில தனியார் பள்ளிகள் அடுத்த கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறப்பு எப்போது என்பது பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பள்ளிகள் திறப்பு:


தமிழகத்தில் தற்போது 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் முடிவடைந்துள்ளது. அதற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் நான்கு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ரமலான் பண்டிகை மற்றும் தேர்தல் நடைபெறும் காரணங்களுக்காக தற்போது ஒன்பது நாட்கள் தொடர் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. 


இவர்களுக்கு மிஞ்சியுள்ள பாடங்களுக்கான பொது தேர்வுகள் ஏப்ரல் 23,24 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. அதன் பின் அவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட உள்ளது. 


மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. இந்நிலையில் அனைவர் மத்தியிலும் ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில் சில தனியார் பள்ளிகள் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், எல்.கே.ஜி யு.கே.ஜி வகுப்புகளுக்கு ஜூன் 17ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது. 


தமிழகத்தில் அரசு பள்ளிகள் திறப்பு அறிவிப்புகள் தேர்தல் முடிந்த பின்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், அதன் பின் பள்ளிகள் திறப்பதற்கான தேதி, அப்போது உள்ள வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459