School morning prayer activities 6.3.2024 - ஆசிரியர் மலர்

Latest

06/03/2024

School morning prayer activities 6.3.2024


 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.03.2024


திருக்குறள் 

பால் : அறத்துப்பால்

இயல் :ஊழியல்

அதிகாரம் :ஊழ்


குறள்:371


ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்

போகூழால் தோன்றும் மடி.


விளக்கம்:


பணம் சேர்வதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், சேர்ப்பதற்கான முயற்சி உண்டாகும். இருப்பதையும் இழப்பதற்கான விதி இருந்தால் சோம்பல் உண்டாகும்.


பழமொழி :

One lie makes many


ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்...


2. இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பது தம் கடமை.


பொன்மொழி :


மனம் நிறைந்த அன்புடன்

செய்யப்படும் ஒவ்வொரு

செயலும் சந்தோசத்தை

கொண்டு வந்தே தீரும்.


பொது அறிவு : 


1. உயிர் காக்கும் உன்னத

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

உலோகம் என அழைக்கப்படுவது எது?


விடை: ரேடியம் 


2. முதல் சங்கத்தைத் தோற்றுவித்த மன்னன்?


விடை: காய்சின வழுதி


English words & meanings :


Legible.       தெளிவான 

Semifinal.    அரையிறுதி

Punishment தண்டனை

Hitch            முடிச்சு, தடை

Corporeal    உடல்வருத்தும் தண்டனை


ஆரோக்ய வாழ்வு : 


புதினா கீரை : வெயிலிலிருந்து களைப்பாக வீடு திரும்பிய பெரியவர்களுக்கோ, விளையாடிவிட்டு வந்த குழந்தைகளுக்கோ கொடுத்தால் உடனடி புத்துணர்ச்சி  கிடைக்கும்.


மார்ச் 06 இன்று

Valentina_Tereshkova_(2017-03-06)

வலந்தீனா விளாடிமீரொவ்னா தெரெசுக்கோவா என்பவர் சோவியத் ஒன்றியத்தின் ஓய்வுபெற்ற விண்வெளி வீராங்கனையும் முதற்தடவையாக விண்வெளிக்குச் சென்ற பெண்ணும் ஆவார். இவர் வசுத்தோக்கு 6 விண்கலத்தில் 1963 சூன் 16 அன்று விண்வெளிக்குச் சென்று அங்கு மூன்று நாள்களுக்குச் சற்றுக் குறைவாகத் தங்கியிருந்து வெற்றிகரமாகத் திரும்பினார்.


1961ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த யூரி ககாரின் மண்ணிலிருந்து விண்ணுக்குச் சென்ற முதல் மாந்தர் என்ற பெருமையைப் பெற்றார். அவருக்கு அடுத்தபடியாகப் பெண் ஒருவரை விண்ணுக்கு அனுப்ப சோவியத்து ஒன்றியம் முடிவு செய்தது. இந்த அறிவிப்பை கேட்டதும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்தன. இறுதிக் கட்டமாக நான்கு பெண்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டனர். மிகக்கடினமான பயிற்சிகளுக்குப் பிறகு 25 வயதான வலண்டீனா தெரெசுக்கோவா தெரிவு செய்யப்பட்டார்.


சூன் 19ஆம் நாள் விண்கலம் பூமிநோக்கிப் பாய்ந்து வந்தபோது, தரையிறங்கும் முன்பே பாராசூட்டில் இருந்து குதித்து, பாதுகாப்பாக இறங்கினார்.[5] ‘சோவியத் ஒன்றியத்தின் வீராங்கனை’ என்ற பதக்கத்துடன் ‘இலெனின் விருது’என பல்வேறு விருதுகள் குவிந்தன.


நீதிக்கதை

 கைமாறிய வாழைப்பழம்


ஒரு சிறுவனுக்கு வாழைப்பழம் ஒன்று கிடைத்தது. தெரிந்தவர் அவனுக்கு அளித்து, 'சாப்பிடு' என்று கொடுத்தார். சிறுவன் பழத்தை வாங்கிக் கொண்டான். பழத்தைத் தொட்டுப் பார்த்ததுமே சற்று 'கொழ கொழ' வென்று இருந்ததால், அதை அவன் சாப்பிட விரும்பவில்லை.


அந்தப் பழத்தை, அப்பாவிடம் கொடுத்தான். "நீ சாப்பிடு, உனக்குத்தானே கொடுத்தார்.?" என்றார் அவனுடைய அப்பா.


"எனக்கு இப்பொழுது வேண்டாம்.

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

நீங்கள் சாப்பிடுங்கள்" என்றான் சிறுவன்.


சிறுவனின் தந்தை பழத்தைப் பார்த்தார். பழம் சாப்பிடும் படியான நிலையில் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டார். மனைவியை அழைத்தார்.


"இந்தப் பழத்தைச் சாப்பிடு. நானே சாப்பிடுவேன். ஆனால் எனக்கு பசியில்லை" என்று கூறி மனைவிக்கு அப்பழத்தை தானம் செய்தார்.


மனைவி பழத்தைச் சாப்பிடலாம் என்று தான் கையில் வாங்கிக் கொண்டாள். வாங்கிய பிறகுதான் பழம் மிகவும் பழுத்துவிட்டது என்பதை அறிந்தாள். தோலை உரித்துப் பார்த்தால் ஒரு வேளை அது அழுகிய பழமாகவும் இருக்கக் கூடும் என்று எண்ணினாள். அதனால் அவள் அப்பழத்தை உரிக்காமலே, இதை யாருக்கு கொடுக்கலாம் என்று யோசித்தாள். அப்போது வீட்டு வேலை செய்யும் வேலைக்காரப் பெண் வந்தாள்.


"வேலாயி, இங்க வா, ரொம்ப களைப்பா இருக்கிறாயே, இந்தா இந்தப் பழத்தைச் சாப்பிடு" என்று கையில் இருந்த வாழைப்பழத்தை அவளிடம் தந்தாள்.


பழத்தைப் பெற்றுக்கொண்ட வேலைக்காரி, அதைத்தின்ன முடியாது என்பதை அறிந்து கொண்டாள். எஜமானி கொடுத்ததை வேண்டாம் என்று சொல்லத் தயக்கமாக இருந்ததால் கொடுத்ததை வாங்கிக் கொண்டாள்.


பிறகு வாசல்பக்கம் சென்றாள். பழத்தைத் தூக்கிப் போட்டுவிடலாம் என்ற எண்ணத்தில்தான் வாசற்பக்கம் வேலாயி வந்தாள். அப்போது தெருவில் பால்காரன் பசுமாட்டுடன் சென்றதைப் பார்த்தாள்.


அழுகிய பழத்தைத் தின்னமுடியாமல் தூக்கிப் போடுவதை விடவும், பசுவுக்கு அளித்தால் புண்ணியம் கிடைக்குமே என்று நினைத்தாள். பழத்தைக் கொண்டு போய் பால்காரனிடம் கொடுத்து, "பசுவுக்கு இதைக் கொடுத்துவிடு" என்றாள்.


பால்காரன் பழத்தை வாங்கினான். “ஏம்மா, அழுகிய இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் பசுவுக்கு ஒத்துக்கொள்ளாது” என்று கூறி குப்பைத் தொட்டியில் விட்டெறிந்தான்.


பழம் நல்ல நிலையில் இருந்தால் சிறுவனே அதைச் சாப்பிட்டிருப்பான். நன்றாக இல்லை என்று தெரிந்ததால் தான் சிறுவன் அப்பாவுக்கும், அப்பா அம்மாவுக்கும், அம்மா வேலைக்காரிக்கும், வேலைக்காரி பசுவுக்கும் தானம் செய்தார்கள்.


தனக்குத் தேவையற்றது என்று நினைப்பதை, தனக்கு உதவாது என்று தோன்றியதை பிறருக்குக் கொடுப்பதற்குப் பெயர் தானமல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.


இன்றைய செய்திகள் - 06.03.2024


*மருந்து கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும்-


சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவு.


*இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தல்.


*"தமிழகத்தில் வெப்பநிலை மூன்று டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்"-

வானிலை மையம் அறிக்கை.


*மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி துவங்கியது.


*முத்தரப்பு டி20 தொடர் சாம்பியன் பட்டம் வென்றது நெதர்லாந்து.


Today's Headlines


*CCTV cameras should be installed in drug stores- Chennai District Collector orders.


 *Indian Embassy advises Indians in Israel to be safe.


 *"Temperature in Tamilnadu to increase by three degree Celsius"-

 Meteorological Department report.


 *Madurai AIIMS Hospital construction work started.


 *Netherlands won Tri-T20 Series

TEACHERS NEWS
Champions.


 Prepared by

Covai women ICT_போதிமரம்


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459