அரசு பணி, பதவி உயர்வில் திறந்தநிலை பல்கலை. பட்டங்கள் செல்லாது தேசிய அளவில் உருவெடுத்துள்ள பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்: பல்கலைக்கழக மானிய குழுவுக்கு சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தல் - ஆசிரியர் மலர்

Latest

10/03/2024

அரசு பணி, பதவி உயர்வில் திறந்தநிலை பல்கலை. பட்டங்கள் செல்லாது தேசிய அளவில் உருவெடுத்துள்ள பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்: பல்கலைக்கழக மானிய குழுவுக்கு சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தல்

 அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களில் வேலை வாய்ப்புகளுக்கு திறந்தநிலை பல்கலைக்கழக பட்டங்கள் செல்லாது என்ற அறிவிப்பால் ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் உதவியாளர்களாக பணியில் சேர்ந்தவர்கள், திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் பெற்ற பட்டங்களின் அடிப்படையில், பிரிவு அதிகாரி பதவி உயர்வு வழங்கப்பட்டது.

பின்னர், உதவி பதிவாளர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு பட்டியலில் தங்களை சேர்க்காததை எதிர்த்து இவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து திறந்த நிலை பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற அதிகாரிகளான செண்பகம், ராஜேஷ், பத்மபிரியா ஆகியோர் மேல் முறையீடு செய்திருந்தனர்.


அதேபோல வழக்கமான முறைப்படி பட்டம் பெற்ற சீனிவாசன், இளங்கோவன், சுந்தரராஜன் உள்ளிட்ட 26 பேர் திறந்த நிலை பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்திருந்தனர் . இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சிங்காரவேலன், அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் கே.வி.சஜீவ் குமார் ஆகியோர் ஆஜராகினர்.


வழக்குகளை விசாரித்த நீதிபதிகள்,


திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்கள் உதவிப் பதிவாளர் பதவி உயர்வு வழங்கக் கோரிய வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகிறது. அதேசமயம், ஏற்கனவே பிரிவு அதிகாரிகளாக வழங்கப்பட்ட பதவி உயர்வு மற்றும் பணப்பலன்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. திறந்த நிலை பல்கலைக்கழக பட்டங்களை, அரசு, பொதுத்துறை,

TEACHERS NEWS
பல்கலைக்கழக வேலைவாய்ப்புகளுக்கு செல்லாது என்று அறிவிப்பதால் ஏற்படும் பிரச்னை என்பது தேசிய அளவில் உருவெடுத்துள்ளது.


லட்சக்கணக்கானோர் இதுபோன்ற சிக்கலில் உள்ளனர். இதற்கு சரியான சட்டரீதியான தீர்வு காணப்பட வேண்டும்.

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

எனவே, எதிர்காலத்தில் இதுபோன்ற குழப்பங்களை தவிர்க்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை பல்கலைக்கழக மானிய குழு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459