மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு - அமைச்சரவை ஒப்புதல் - ஆசிரியர் மலர்

Latest

07/03/2024

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு - அமைச்சரவை ஒப்புதல்


மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் வரை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.


மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு டிஏ எனும் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி(டிஏ), ஆண்டுக்கு 2 முறை உயர்த்தி வழங்கப்படும்.


ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி என்பது வழங்கப்பட வேண்டும். ஆனால் ஒவ்வொரு முறையும் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு ஜனவரி, ஜூலை என முன்தேதியிட்டு வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது.


இந்த அகவிலைப்படி என்பது அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டின் 12 மாத சராசரி சதவீதத்தின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும். இந்நிலையில் தான் மத்திய அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படி உயர்வை 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன்மூலம் மத்திய அரசு பணியாளர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி என்பது உறுதியாகி உள்ளது.


இந்த அகவிலைப்படி என்பது ஜனவரி மாதம் முன்தேதியிட்டு வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே மத்திய அரசு பணியாளர்களுக்கான மொத்த அகவிலைப்படி என்பது 46 சதவீதமாக உள்ளது. தற்போது 4 சதவீதம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த அகவிலைப்படி என்பது 50 சதவீதத்தை தொட்டுள்ளது.


இதன்மூலம் சுமார் 49.18 லட்சம் ஊழியர்களும், 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். தற்போதைய 4 சதவீத டிஏ உயர்வு மூலம் ஆண்டுக்கு ரூ.12,868.72 கோடி செலவாகும் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459