உடற்கல்வி ஆசிரியர்களுக்கு (02.03.2024) பதவி உயர்வு கலந்தாய்வு - DSE செயல்முறைகள் - ஆசிரியர் மலர்

Latest

01/03/2024

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு (02.03.2024) பதவி உயர்வு கலந்தாய்வு - DSE செயல்முறைகள்

 01.01.2023 நிலவரப்படி உடற்கல்வி ஆசிரியர் பணிநிலையில் இருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை - || ஆக பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்தோரின் உத்தேச பெயர்ப் பட்டியலினை அனுப்பி அதனை சரிபார்த்து அனுப்பிடவும் 01.01.2024 நிலவரப்படி தகுதி வாய்ந்தவர்கள் இருப்பின் அவர்களை சேர்த்திடவும் கருத்துருக்கள் அனுப்புமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களிடம் கோரப்பட்டு . அதனடிப்படையில் பெறப்பட்ட கருத்துருக்களின் அடிப்படையில் தயார் செய்யப்பட்ட தேர்ந்தோர் பட்டியல் இத்துடன் இணைத்து அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது.


 இப்பட்டியலில் உள்ள உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு 02.03.2024 அன்று காலை 10.00 மணி முதல் EMIS இணையதளத்தின் மூலம் நடைபெற உள்ளதால் , பட்டியலில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் கலந்தாய்வில் கலந்து கொள்ள தக்க அறிவுரைகள் வழங்கிடவும்.


 காலிப்பணியிட விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்திடவும் , மின்தடை ஏற்படாமல் கணினி இணையதள வசதிகள் ஏற்பாடு செய்திடவும் . எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் செயல்படுமாறும் முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459