SCHOOL MORNING PRAYER ACTIVITIES 14.2.2024 - ஆசிரியர் மலர்

Latest

13/02/2024

SCHOOL MORNING PRAYER ACTIVITIES 14.2.2024


 திருக்குறள்: 


பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : மெய்யுணர்தல்

குறள்:356

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.

விளக்கம்:

 பெரியவர்களிடம் கற்று, மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் திரும்பவும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர்.

பழமொழி :

Never cast the oar till you are out

கரையை அடையும் முன் துடுப்பை எறியாதே

இரண்டொழுக்க பண்புகள் :

. மகிழ்ச்சி உங்கள் மனதில் தோன்ற புன்னகை உங்கள் முகத்தில் எப்போதும் குடியேற வேண்டும். 

2. படுத்தே இருந்தால் படுக்கையும் பகையாகும். எழுந்து முயற்சி செய் உலகே உனது வசமாகும்.

பொன்மொழி :

இருளை இருளால் விரட்ட முடியாது, ஒளியால் மட்டுமே அதைச் செய்ய முடியும். வெறுப்பை வெறுப்பால் விரட்ட முடியாது, அன்பால் மட்டுமே அதைச் செய்ய முடியும். --மார்டின் லூதர் கிங்


பொது அறிவு : 

1. சூரியனை நேருக்கு நேர் பார்க்கக்கூடிய பிராணி எது?

விடை: கழுகு 


2. வாடகை கார்கள்(டாக்ஸி) அதிகம் உள்ள நகரம்?

விடை: மெக்சிகோ 

English words & meanings :

 Zephyr - a slight wind தென்றல் ; zeal - a feeling of strong eagerness மிகுதியான‌ஆர்வம்

ஆரோக்ய வாழ்வு : 

பசலை கீரை : நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இருந்து இதயத்திற்கு உதவுவது வரை என பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.    கால், கை, மூட்டுக்களில் வரக்கூடிய வாதத்தையும் போக்கக் கூடிய தன்மை இந்த பசலைக் கீரைக்கு உள்ளது. 

நீதிக்கதை

 மூன்று பொம்மைகள்


மன்னர் ஒருவரின் சபையிலே மதிநுட்பம் வாய்ந்த புலவர் ஒருவர் இருந்தார். மன்னர் எதைச் செய்தாலும், புலவருடன் கலந்தாலோசனை செய்த பின்பே முடிவெடுப்பார். இதனைக் கண்டு சபையில் இருந்த அமைச்சர்கள் மிகுந்த கோபம் கொள்வதுண்டு.

அமைச்சர்களின் கோபத்தையும் மன வருத்தத்தையும் மன்னர் அறிந்து கொண்டார். அவர்களுக்கு உண்மையைப் புரிய வைக்க வேண்டும் என் விரும்பினார். அதற்குரிய வாய்ப்பு மன்னருக்குக் கிடைத்தது.

மன்னரும் அமைச்சர்களும் கூடியிருந்த சபைக்குச் சிற்பக் கலைஞர் ஒருவர் வந்தார். அவர் தம்மிடம் மூன்று பொம்மைகள் உள்ளது என்றும்

அவற்றை மன்னர் வாங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.

"பொம்மைகளைக் காட்டுங்கள் என்றார் மன்னர்.

கலை நயம் மிகுந்த பொம்மைகள் மூன்றை, சிற்பி தனது பையிலிருந்து எடுத்து மன்னனின் பார்வைக்காக வைத்தார்.

அழகான பொம்மைகள்; மூன்றும் ஒரே அளவு; ஒரே அச்சில் வார்த்தது போலத் தோற்றமளித்தன.

மன்னர் ஒரே மாதிரியான தோற்றமுள்ள பொம்மைகளில் ஒன்றை மட்டுமே வாங்க நினைத்தார்.

"அமைச்சர்களே! இவற்றுள் எது நன்றாக இருக்கிறது என்று தேர்ந்தெடுங்கள்" என்றார்.


அமைச்சர்கள் வியப்படைந்தனர். "மன்னரே! மூன்று பொம்மைகளும் ஒன்று போலவே இருப்பதால் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். இதில் தேர்வு செய்ய என்ன இருக்கிறது?" என்று கூறினார்கள்.

"அப்படியா. சரி, சிற்பியாரே! முதல் பொம்மையைக் கொடுங்கள். அதையே எடுத்துக் கொள்ளலாம்" என்றார்.

அச்சமயம் சபைக்கு வந்தார் புலவர்."மன்னரே, சற்றுப் பொறுங்கள். மூன்று பொம்மைகளில் எது சிறந்தது என்பதை நான் கண்டறிந்து தேர்வு செய்கிறேன்” என்றார் புலவர்.

மன்னரும் அமைச்சர்களும் புலவர் எவ்வாறு தேர்வு

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

செய்யப்போகிறார் என்பதை அறியும் ஆவலுடன் இருந்தார்கள்.

புலவர் பொம்மைகள் இருந்த இடத்திற்கு வந்தார். சிறிய கல் ஒன்றை எடுத்து ஒரு பொம்மையின் காதில் போட்டார். அந்தக் கல், மற்றொரு காது வழியாக வெளியே வந்து விட்டது


அந்தக் கல்லை, அடுத்த பொம்மையின் காதில் போட்டார். காதுக்குள் போட்ட கல், பொம்மை யின் வாய் வழியாக வெளியில் வந்து விட்டது."

மூன்றாவது பொம்மையின் காதில் கல்லைப் போட்டார். அந்தக் கல், வெளியே வராமல் பொம்மைக்குள்ளேயே தங்கி விட்டது.

"மன்னரே! முதல் பொம்மை தனது காதால் கேட்டதை, மற்றொரு காதால் வெளியில் விட்டு விடும். அடுத்த பொம்மை காதால் கேட்டதை வாயால் சொல்லி விடும். மூன்றாவது பொம்மையோ காதால் கேட்டதை எவரிடமும் கூறாது. எனவே மூன்றாவது பொம்மையே நல்ல பொம்மை"

புலவரின் தேர்வைக் கண்டு மன்னர் கைதட்டி

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

ஆரவாரித்துப் பாராட்டினார். புலவரின் நுண்மதியை அமைச்சர்களும் வியந்து போற்றி னார்கள்.

இன்றைய செய்திகள்

14.02.2024

*இந்தியாவில் வாகனங்கள் விற்பனை ஜனவரி மாதம் 15% அதிகரிப்பு.

*நடுக்கடலில் தத்தளித்த 11 தமிழக மீனவர்களை

TEACHERS NEWS
மீட்டது விக்ரம் ரோந்து கடற்படை கப்பல்.

*ஆலப்புழாவில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பரவல்.

*பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் புதிய வகை பறவைகள் வருகை.

*மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை; டாப் 10இல் இடம் பிடித்த இரண்டு இந்திய வீராங்கனைகள் 10வது இடம் ஹர்மன் ப்ரீத் கவுர் 4வது இடம் தீப்தி சர்மா.

Today's Headlines

*Vehicle sales in India up 15% in January

*Vikram patrol ship rescued 11 Tamil Nadu fishermen stranded in the middle sea.

* Outbreak of African swine fever in Alappuzha.

* Arrival of new species


of birds in Pallikaranai marshland.

*Women's One Day Cricket Rankings; 2 Indian players who have placed in top 10; 10th place Harman Preet Kaur 4th place Deepti Sharma.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459