RTI சட்டத்தின் கீழ் தகவல் அளிக்காத TNPSC-ஐ கண்டித்த தமிழ்நாடு தகவல் ஆணையம் - ஆசிரியர் மலர்

Latest

 




10/02/2024

RTI சட்டத்தின் கீழ் தகவல் அளிக்காத TNPSC-ஐ கண்டித்த தமிழ்நாடு தகவல் ஆணையம்

 


8uPHSr6Gp7tM7S9h20ZH

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் மனுதாரர் கோரிய தகவல்களை அளிக்காத தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி)  மற்றும் பொதுத் தகவல் அதிகாரியை (பிஐஓ) தமிழ்நாடு தகவல் ஆணையம் (டி.என்.ஐ.சி) கடுமையாகச் சாடியுள்ளது.


2011-12ல் தமிழ்நாடு போக்குவரத்துக் கீழ்நிலைப் பணியில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் (கிரேடு II) பணி நியமனத்தில் வாய்மொழி தேர்வுக்கு தேர்வாகாதவர்கள், தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் மற்றும் அவர்கள் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் நகல் கேட்டு சேலத்தைச் சேர்ந்த எம்.செந்தில் குமார் என்பவர் தாக்கல் செய்த மனு மீதான வழக்கு விசாரணையில் உள்ளது. 


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மற்ற இரண்டு மனுக்களில், 2013-18-ம் ஆண்டில், வாய்மொழித் தேர்வுக்கு தற்காலிகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 226 விண்ணப்பதாரர்களின் கல்வி/தொழில்நுட்பத் தகுதி விவரங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்ட பணி நியமன ஆணைகளின் கடித நகல்களை அவர் கோரியுள்ளார்.


இதற்கு பொதுத் தகவல் அதிகாரியிடம் இருந்து சரியான பதில் கிடைக்காததால், அனைத்து மனுக்கள் குறித்தும் செந்தில் குமார் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார், அதைத் தொடர்ந்து அவருக்கு விரிவான பதிலை அனுப்ப ஆணையம் பொது அதிகாரிக்கு உத்தரவிட்டது.


பொதுத் தகவல் அதிகாரி இந்த உத்தரவை நிறைவேற்றாததால், மாநில தகவல் ஆணையர் ஆர். பிரியாகுமார் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். மாநில தகவல் ஆணையத்துடனோ அல்லது மனுதாரருடனோ எந்த தகவலும் பகிர்ந்து கொள்ளப்படவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், பொதுத் தகவல் அதிகாரியின் நடவடிக்கை ஆர்.டி.ஐ சட்டம் மற்றும் தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் உத்தரவை மதிக்காதது என்று கூறினார்.


இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, மாநில தகவல் ஆணையர் ஆர். பிரியாகுமார் ஆர்.டி.ஐ சட்டப் பிரிவு 20(1)-ன் கீழ் அதிகபட்ச அபராதம் ரூ.25,000 மற்றும் ஆர்.டி.ஐ சட்டப் பிரிவு 20(2)-ன் கீழ் ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று அப்போதைய பொதுத் தகவல் அதிகாரியிடம் விடம் விளக்கம் கேட்டுள்ளார்.


மேலும், மனுதாரர் கோரிய முழுத் தகவல்களையும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 7 நாட்களுக்குள் அளிக்குமாறும் அதை மாநிலத் தகவல் ஆணையத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459