NMMS EXAM RESULTS: பிற்பகல் 04.00 மணிக்கு வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

28/02/2024

NMMS EXAM RESULTS: பிற்பகல் 04.00 மணிக்கு வெளியீடு

 இன்று (28.02.2024) பிற்பகல் 04.00 மணிக்கு NMMS தேர்வு முடிவுகள் வெளியீடு!

IMG_20240227_181828

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 8 - ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித்தொகை பெறுவதற்கான தேர்வு ( NMMS EXAMINATION ) - 03.02.2024 அன்று நடைபெற்றது , இத்தேர்வில் 2,25,490 மாணாக்கர்கள் பங்கு பெற்றனர் . இத்தேர்வின் முடிவுகள் 28.02.2024 அன்று பிற்பகல் 4.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது . எனவே இத்தேர்வெழுதிய மாணாக்கர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Results என்ற தலைப்பில் சென்று தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித்தொகை பெறுவதற்கான தேர்வு ( NMMS EXAMINATION ) - முடிவுகள் பிப்ரவரி -2024 என்ற பக்கத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து தாங்கள் பெற்ற மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.


மேலும் தெரிவு செய்யப்பட்டோரின் பட்டியலும் இவ்விணையதளத்திலே National Means Cum Merit Scholarship Scheme என்ற பக்கத்தில் வெளியிடப்படும் என்று Examination தெரிவிக்கப்படுகிறது .

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459